ரெயில்வே அமைச்சகம்

கோல்ட்கோஸ்டில் ரயில்வேயின் தங்கமழை

प्रविष्टि तिथि: 14 APR 2018 9:02PM by PIB Chennai

2018 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா முன்னேறும்  நாடுகளில் ஒன்றாக இருக்கும் நிலையில், இந்த மாபெரும் முயற்சிக்கு இந்திய ரயில்வேயின் பங்களிப்பு குறித்து, ஓரளவே வெளியில் தெரியும். காமன்வெல்த் போட்டிகளுக்குச் சென்ற மொத்த விளையாட்டுவீரர்கள், வீராங்கனைகளில் நான்கில் ஒரு பகுதியினர் பளுதூக்குதல், மல்யுத்தம், ஹாக்கி, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக் மற்றும் பிற விளையாட்டுக்களில் பங்கேற்ற 49 வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் நான்கு பயிற்சியாளர்கள், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்தவர்கள்.  மகளிர் ஹாக்கி பிரிவில் பெரும்பாலானவர்கள் ரயில்வேயைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தியக் குழுவில் 25 சதவீதத்தினராக இருந்தபோதும், இந்தியா வென்ற தங்கப்பதக்கங்களில் 40 சதவீதம் ரயில்வே விளையாட்டுக்கள் மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்தவர்கள் ஈட்டியது என்பது பெருமைக்குரியதாகும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ரயில்வேயைச் சேர்ந்தவர்கள் பத்து தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், நான்கு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.

மல்யுத்தத்தில் ஏழு மல்யுத்த வீரர்கள் இந்தியக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவுக்காக தங்கம் வென்று, நூறு சதவீத வெற்றிவிகிதத்தைத் தந்திருக்கிறார்கள்! சுஷில்குமார், ராகுல் அவாரே, சுமித் மாலிக், பஜ்ரங், வினேஷ் ஆகியோர் ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். சாக்ஷி மாலிக், கிரண் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர். பளுதூக்கும் பிரிவில் பங்கேற்ற பத்து ரயில்வே வீரர்களில் ஆறு பேர் இந்தியாவுக்குப் பதக்கம்  தங்கம் வென்றுள்ளனர். இவற்றில் ஐந்து தங்கப்பதக்கங்களாகும். மீராபாய் சானு, சங்கீதா சானு, பூனம் யாதவ், சத்தீஷ் சிவலிங்கம், ஆர் வி ராகுல் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். பிரதீப் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

குத்துச்சண்டையில் ரயில்வேயின் மனோஜ்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். நவ்ஜீத் தில்லான் உணர்ச்சிகரமான தனது செயல்பாட்டின் மூலம் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற இணையதளத்தைக் காணவும்.

==========


(रिलीज़ आईडी: 1529211) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English