பாதுகாப்பு அமைச்சகம்
ககன்சக்தி 2018: கடற்படையின் போர்விமானச் செயல்பாடு
Posted On:
14 APR 2018 7:15PM by PIB Chennai
இந்திய விமானப் படை தற்போது நடத்தி வரும் “ககன்சக்தி – 2018” என்ற போர்ப் பயிற்சியின் ஒரு கட்டமாக மேற்குக் கடலோரப் போர்ப்பயிற்சியை 2018ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி நடத்தியது. இந்தியக் கடல் பகுதியில் வான் பகுதியில் தனது ஆளுமையை நிலைநாட்டும் வகையிலும் தீவிரத் தாக்குதல் வலிமையைப் பெறும் விதத்திலும் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. இதன்படிக் கிழக்குக் கடற்பகுதியிலிருந்து எஸ் யு-30 ரக போர் விமானங்கள் மேற்குக் கடல் பகுதியில் 2,500 கி.மீ. தூரம் பல்வேறு இலக்குகளின் மீது தாக்குதல் நடத்திவிட்டு, தெற்குக் கடற்படைத் தளத்தில் தரையிறங்கியது. ஒரே பணியில் இந்தப் போர் விமானம் மொத்தம் 4,000 கி.மீ. தூரம் பறந்தது. இப்படி மிகவும் சிக்கலான போர் விமானத் தாக்குதலை எரிபொருள் நிரப்பும் ஐஎல் – 78 எனப்படும் விமானங்களின் துணையோடு சாத்தியமாகியிருக்கிறது. காரணம், தொடர்ந்து விண்ணில் போர்விமானம் பறக்கும்போது, தேவையான எரிபொருள் தேவை நிறைவேறும். இந்தக் கூட்டுச் செயல்பாட்டை இந்தியக் கடற்படையின் பி - 8 ரகப் போர் விமானமும் இந்தியப் படை விமானத்தின் AWACS மற்றும் FRA ரக விமானங்களும் இப்பணியில் இணைந்தன.
இந்தியக் கடற்படையுடன் விமானப்படை இணைந்து மேற்கொள்ளும் போர்ப் பயிற்சிகளை மதிப்பிடுவதற்கு உரிய சூழ்நிலையைக் “ககன்சக்தி” போர் விமானப் பயிற்சி வகை ஏற்படுத்தியுள்ளது.
*********
(Release ID: 1529198)