பாதுகாப்பு அமைச்சகம்

ராணுவத் தளபதிகள் மாநாடு: ஏப்ரல் 2018

Posted On: 15 APR 2018 1:38PM by PIB Chennai

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகளின் மாநாடு 16.04.2018 அன்று தொடங்குகிறது. இதில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு. சுபாஷ் ராம்ராவ் பாம்ரே தொடக்கவுரையாற்றுவார்.

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தலைமையிலான இந்த மாநாட்டில் பங்கேற்கும் மூத்த தளபதிகள், ராணுவ அமைப்புகள் மற்றும் ஒட்டுமொத்த ராணுவத்தின் குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்துப் பேசுவார்கள்.

நடைமுறையில் உள்ள பாதுகாப்புச் செயல்பாடுகளின் நிர்வாகம், எதிர்காலப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் குறைத்தல், திறன்மிக்க எதிரிகளை எதிர்த்து முறியடிக்கும் திறனை விரிவுபடுத்துதல் போன்ற முக்கியமான விஷயங்கள் இதில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.  வடக்குப் பகுதி எல்லைகள் நெடுகிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி விரிவுபடுத்துதல், ராணுவம் தொடர்பான ரயில் பாதைகள் குறித்து ஆய்வு செய்தல், ஆயுதங்களின் பற்றாக்குறையைக் சரிசெய்வதை உறுதிபடுத்த வரம்புக்குட்பட்ட நிதிநிலை அறிக்கையைத் தேர்வு செய்தல், எல்லைப்புறச் சாலை அமைப்புத் திட்டங்கள் தொடர்பான விஷயங்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் பங்களிப்புச் சுகாதாரத் திட்டம் போன்ற விஷயங்களோடு, செயல்பாடுகள், நிர்வாகம், ராணுவ வீரர்களின் நலன் குறித்த விஷயங்களும்கூட, திட்டமிடுதலுக்கும், செயல்படுத்துவதற்கும் என விரிவான முறையில் விவாதிக்கப்படும்.

பொறுப்பில் உள்ளவர்களின் கருத்துக்கள் மூலம் முக்கியமான கொள்கை முடிவுகளை உருவாக்குவதற்காக ராணுவத் தலைமைத் தளபதி தலைமையில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ராணுவத் தளபதிகளின் மாநாடு நடைபெறுகிறது. திட்டமிடுதலுக்கும், செயல்பாட்டு நடைமுறைக்கும் இந்திய ராணுவத்தில் இந்த நிகழ்வு முக்கியமானதாக உள்ளது.

===========



(Release ID: 1529188) Visitor Counter : 155


Read this release in: English