உள்துறை அமைச்சகம்
இடதுசாரித் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதில் அரசின் புதிய கொள்கை பயனளிக்கிறது
Posted On:
16 APR 2018 10:30AM by PIB Chennai
இடதுசாரித் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 2015 முதல் மத்திய உள்துறை அமைச்சகம் தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்திவருகிறது. இது பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளை உள்ளடக்கிய பன்முக உத்தியைக் கொண்டதாகும்.
வளர்ச்சியின் பயன்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் வகையில் வளர்ச்சிப் பணிகளுக்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதுடன் வன்முறை மீதான சகிப்புத்தன்மையின்மைக்கு இந்தப் புதிய கொள்கையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இடதுசாரித் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவையாக 10 மாநிலங்களில் 106 மாவட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அடையாளப்படுத்தியுள்ளது. போக்குவரத்து, தொடர்பு, வாகனங்களுக்கான வாடகை, சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கான உதவித்தொகை, படைகளுக்கான தற்காலிக உள்கட்டமைப்பு போன்ற மாநிலஅரசின் பாதுகாப்பு தொடர்பான செலவினங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு தொடர்பான செலவினத் திட்டத்தின் கீழ் இந்த மாவட்டங்களுக்கு நிதிஉதவி அளிக்கப்படுகிறது. அடையாளம் காணப்பட்ட 106 மாவட்டங்களில் நாடு தழுவிய அளவில் உள்ள இடதுசாரித் தீவிரவாதத்தில் 80 முதல் 90 சதவீதம் உள்ள 35 மாவட்டங்கள் ‘மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக’ அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வகைப்படுத்தல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஆதாரங்களை அளிப்பதற்கான கண்ணோட்டத்தை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான மாவட்டங்கள் சிறிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாதுகாப்பு தொடர்பான செலவினத்திற்கான 106 மாவட்டங்களின் பூகோளப் பகுதியை 126 மாவட்டங்களாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கையை 35லிருந்து 36 மாவட்டங்களின் எண்ணிக்கையை 36 மாவட்டங்களாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இடதுசாரித் தீவிரவாதச் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது. வன்முறைச் சம்பவங்களில் 20 சதவீதக் குறைவு ஏற்பட்டு 2013ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டில் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 34 சதவீதம் குறைந்துள்ளது. 2013ம் ஆண்டில் 76 மாவட்டங்களில் இடதுசாரித் தீவிரவாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் 2017ம் ஆண்டில் 58 மாவட்டங்களில் மட்டுமே இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 30 மாவட்டங்களில் மட்டும் நாட்டின் மொத்த இடதுசாரித் தீவிரவாத சம்பவங்களில் 90 சதவீதம் நிகழ்ந்துள்ளன. அதே நேரத்தில் சில புதிய மாவட்டங்களில் இடதுசாரித் தீவிரவாதிகள் தங்களது கவனத்தை செலுத்தத் தொடங்கிஉள்ளனர்.
மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப தனது படைகள் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஆய்வு மேற்கொள்ளும் முழுமையான நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 44 மாவட்டங்கள் விலக்கப்பட்டு மேலும் புதிதாக 8 மாவட்டங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் எல்லையில் உள்ள பழங்குடியினப் பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தங்களது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் கேரளாவைச் சேர்ந்த மூன்று மாவட்டங்கள் பாதுகாப்பு தொடர்பான செலவின மாவட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை முன்கூட்டியே எடுக்கப்பட்டதன் விளைவாக இந்த மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நிகழ்வில்லை.
இந்த நடவடிக்கையின் பயனாக 126 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டம் தற்போது 11 மாவட்டங்களில் 90 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும். மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 36 இல் இருந்து தற்போது 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தியமைக்கப்பட்ட வகைப்படுத்தல் என்பது இடதுசாரித் தீவிரவாத உண்மைச்சூழலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
***
(Release ID: 1529183)
Visitor Counter : 218