சுற்றுலா அமைச்சகம்
மார்ச் 2018-ல் மார்ச் 2017-ஐவிட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்து 13 புள்ளி நான்கு சதவீதமும், மின்னணு சுற்றுலா விசா மூலம் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை 68 புள்ளி எட்டு சதவீதமும் உயர்ந்தது
Posted On:
13 APR 2018 5:38PM by PIB Chennai
சுற்றுலா அமைச்சகம் குடியேற்றத் துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் மாதந்தோறும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரத்து மற்றும் மின்னணு சுற்றுலா விசா மூலம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வரத்து குறித்த தகவல்களை தொகுத்து வெளியிடுகிறது. 2018 மார்ச் மாதம் வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறித்த விவரம் வருமாறு:-
வெளிநாட்டுச்சுற்றுலா பயணிகள் வரத்து (எஃப்டிஏ)
- 2018 மார்ச்சில் எஃப்டிஏ 10.26 லட்சம், 2017 மார்ச்சில் வந்த எஃப்டிஏ-ஆன 9.05 லட்சத்தைவிட இது 13.4% கூடுதலாகும்.
- 2018 ஜனவரி முதல் மார்ச் வரை எஃப்டிஏ 31.27 லட்சம். இது 2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான எஃப்டிஏ-ஆன 28.45 லட்சத்தைவிட 9.9% கூடுதலாகும்.
மின்னணு சுற்றுலா விசா மூலம் எஃப்டிஏ;
- 2018 மார்ச்சில் மின்னணு சுற்றுலா விசா மூலம் ஏற்பட்ட எஃப்டிஏ 2.46 லட்சம், 2017 மார்ச்சில் மின்னணு சுற்றுலா விசா மூலம் வந்த எஃப்டிஏ-ஆன 1.46 லட்சத்தைவிட இது 68.8% கூடுதலாகும்.
- 2018 ஜனவரி முதல் மார்ச் வரை மின்னணு சுற்றுலா விசா எஃப்டிஏ 7.62 லட்சம். இது 2017 ஜனவரி முதல் மார்ச் வரையிலான மின்னணு சுற்றுலா விசா எஃப்டிஏ-ஆன 4.67 லட்சத்தைவிட 63.0% கூடுதலாகும்
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.
------
(Release ID: 1529077)