பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் சாலைத்திட்டங்கள் குறித்து டாக்டர் ஜிதேந்தர் சிங்-கிடம் ராணுவ முதன்மைத் தலைமைப் பொறியாளர் விளக்கினார்

प्रविष्टि तिथि: 13 APR 2018 5:10PM by PIB Chennai

  ராணுவ முதன்மை தலைமைப் பொறியாளர் லெப்டினன்ட் ஜெனரல்  எஸ் கே ஸ்ரீவஸ்தவா இன்று (13.04.2018) புதுதில்லியில் மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளித் துறை இணைஅமைச்சர் டாக்டர் ஜிதேந்தர் சிங்கைச் சந்தித்து ஜம்மு காஷ்மீரில் பல்வேறு எல்லை சாலைகள் நிறுவனம் உள்ளிட்ட ராணுவ முகமைகள் மூலம் அமைக்கப்பட்டுவரும் பல்வேறு சாலை மற்றும் பாலத்திட்டப்பணிகளின்  தற்போதைய நிலைமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

      இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திட்டங்களின் பெரும்பாலானவற்றை நிறைவு செய்யும் வகையில் முக்கிய திட்டப்பணிகளின் வேகத்தை விரைவுப்படுத்துமாறு ராணுவ முதன்மை தலைமைப் பொறியாளரிடம் டாக்டர் ஜிதேந்தர் சிங் வலியுறுத்தினார். ரூ.3500 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள மிக முக்கியமான சட்டர்கல்லா சுரங்கப்பாதை குறித்தும் அவர் விவாதித்தார். இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு ஏற்கெனவே முடிவடைந்துள்ளது. லக்கான்பூர் முதல் பசோலிபானி மற்றும் பாதர்வா வழியாகத் தோடா வரை அமைக்கப்படவுள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை பணிகளுடன் சேர்த்து இந்தச் சுரங்கப்பாதைப் பணியும் நடைபெறும்.

----


(रिलीज़ आईडी: 1529047) आगंतुक पटल : 150
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English