வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மத்திய பொதுப்பணித்துறைக்கான பொதுநிதி மேலாண்மை அமைப்பு வலைதளத்தில் நவீன முன்பண அட்டைகள் மற்றும் மின்னணு அளவைப் புத்தகங்கள் ஆகியவற்றை திரு ஹர்தீப் பூரி தொடங்கி வைத்தார்
Posted On:
13 APR 2018 5:27PM by PIB Chennai
மத்திய பொதுப்பணித்துறை (சிபிடபிள்யூடி)-க்கான பொதுநிதி மேலாண்மை அமைப்பு (பிஎஃப்எம்எஸ்) வலைதளத்தில் நவீன முன்பண அட்டைகள் மற்றும் மின்னணு அளவைப் புத்தகங்கள் (இ-எம்பி) ஆகியவற்றை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்( தனிப்பொறுப்பு) துறை இணை அமைச்சர் திரு ஹர்தீப் பூரி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா சங்கர் மிஸ்ரா, நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர். சிபிடபிள்யூடி-யில் பிஎஃப்எம்எஸ் வலைதளத்தில் இ-எம்பி பகுதி இணைக்கப்பட்டுள்ளதை அடுத்து நிதி முன்னேற்றம் அதாவது நிதிப்பயன்பாடு மற்றும் அதனுடன் இணைந்த திட்ட முன்னேற்றம், ஆகியன சிவில் அமைச்சகங்களிலேயே முதலாவது முறையாக ஒருங்கிணைந்த வலை அடிப்படைகளான அமைப்பில் இடம் பெறுகிறது.
நவீன முன்பண அட்டைகள் செயல் முறையும், சிவில் அமைச்சகங்களிலேயே முதல் முறையாக அமலுக்கு வருகிறது. இரு முனைகளிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்த நடைமுறை டிஜிட்டல் செலுத்துகைகளை அதிகபட்சமாக்குகிறது. இதனையடுத்து டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் நோக்கமான 100 சதவீத டிஜிட்டல் செலுத்துகை முறை விரைவில் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தில் நடைமுறைக்கு வரும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்த அமைச்சகத்தின் 400-க்கும் அதிகமான அலுவலகங்களில் இந்த நவீன முன்பண அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த நடைமுறையை அகில இந்திய அளவில் மேற்கொள்வதற்காக அமைச்சகத்துக்கு ஆக்சிஸ் வங்கி, சிபிடபிள்யூடி-க்கு பாரத ஸ்டேட் வங்கி, அச்சுப் பணிகளுக்கு ஐடிபிஐ வங்கி ஆகிய மூன்று வங்கிகள், வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளன.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.
------
(Release ID: 1529046)
Visitor Counter : 181