உள்துறை அமைச்சகம்

e-FRRO திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு விசா தொடர்பான சேவைகளை ஆன்லைன் மூலம் சிறப்பாக இது அளிக்கும் – திரு. ராஜ்நாத் சிங்

Posted On: 13 APR 2018 5:12PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங், புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், வலைதளம் சார்ந்த ‘e-FRRO’ (வெளிநாட்டவர் மண்டல மின்னணுப் பதிவு அலுவலகம்) என்னும் நடைமுறையைத் தொடங்கிவைத்தார்நிகழ்ச்சியில் பேசிய திரு.ராஜ்நாத் சிங், இந்தியாவுக்கு வருகைதரும் வெளிநாட்டினருக்கு விரைவாகவும், சிறப்பாகவும் சேவை அளிப்பதற்காக உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட தொடர்முயற்சியின் பலன் இது என்று கூறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் இங்குத் தங்கியிருக்கும்போது மகிழ்ச்சிகரமான அனுபவத்தைப் பெறமுடியும் என்று அவர் தெரிவித்தார்.

 

வெளிநாட்டினருக்கு விசா தொடர்பான சேவைகளை அளிக்க, ஒருங்கிணைக்கப்பட்ட, வெளிப்படையான ஆன்லைன் தளம் தேவை என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ‘e-FRRO’ திட்டம் வகுக்கப்பட்டதாக அவர் கூறினார். இதன் மூலம், முகமற்ற, ரொக்கமற்ற, காகிதமற்ற சேவைகளை நட்புறவு அனுபவத்துடன் வெளிநாட்டினருக்கு வழங்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு வருகைத் தந்து தங்கும் வெளிநாட்டவர்களுக்குச் சுலபமான சேவை வழங்குவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை இந்த ‘e-FRRO’ திட்டம் அளிக்கும். இந்தப் புதியத் திட்டத்தின் மூலம், வெளிநாட்டவர்கள் 27 வகையான விசா மற்றும் குடியேற்றம் தொடர்பான சேவைகளை இந்தியாவில் பெறவும் அவர்கள் தங்குமிடத்தில் வசதிகளைப் பெறுவதற்கும் இது உதவும். இந்த மின்னணு முறையைப் பயன்படுத்தி, நேரில் ஆஜராகாமல் மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துச் சேவைகளைப் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

                                      ----



(Release ID: 1529034) Visitor Counter : 191


Read this release in: English