பிரதமர் அலுவலகம்

ஜி . சி . சி . எஸ் – 2017 ல் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 23 NOV 2017 11:35AM by PIB Chennai

இலங்கைப்  பிரதமர் திரு. ரனில் விக்ரமசிங்கே அவர்களே, மத்திய அமைச்சர்களே,  பல்வேறு நாடுகளின் அமைச்சர்களே, சர்வதேசத் தொலைத் தொடர்புச் சங்கத்தின் தலைமைச்செயலாளர் மற்றும் 120க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளே, மாணவர்களே, சகோதரிகளே,  நண்பர்களே,

          சர்வதேச இணைய வெளி  மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுதில்லி வந்துள்ள உங்களை நான் வரவேற்கிறேன், இணையதளம் மூலமாக உலகின் தொலைதூரப் பகுதிகளிலிருந்து இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரையும் நான் வரவேற்கிறேன். 

 

நண்பர்களே,

     கடந்த சில பத்தாண்டுகளாக, இணையவெளியானது உலகை எந்த அளவுக்கு மாற்றியுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இங்குக் குழுமியிருப்பவர்களில், மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள், எழுபது மற்றும் எண்பதாம் ஆண்டுகளில் பயன்பாட்டில் இருந்த மிகப் பெரிய கணினியை  நினைவில் கொள்ள வேண்டுகிறேன். அதன் பிறகு ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தொண்ணூறாம் ஆண்டுவாக்கில் மின்னஞ்சல் மற்றும் தனிநபர் கணினிகள் புதிய புரட்சியை ஏற்படுத்தின. அதனைத்  தொடர்ந்து, சமூக ஊடகங்களின் வருகையும்,  புள்ளிவிவரச் சேமிப்பு மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளில் கைபேசிகள் முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்பட்டுப் வருகின்றன. அதன் பிறகு பொருட்களுக்கான இணையதளம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவை தற்போது இயல்பானதாக ஆகிவிட்டன. தற்போதைய விரைவான காலக்கட்டத்திலும் மாற்றங்கள் தொடர்வதையே இது எடுத்துக்காட்டுகிறது.

     டிஜிட்டல் சேவைகளில் ஏற்பட்டுள்ள இந்த அபரிமிதமான வளர்ச்சி, இந்தியாவிலும், விரைவான மாற்றங்கள் ஏற்பட்டுவருவதைப் பிரதிபலிக்கிறது. தகவல்தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வல்லமை உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்தியத் தகவல்  தொழில்நுட்ப நிறுவனங்களும், உலக அளவில் பெயர் பெற்றுத் திகழ்கின்றன.

    தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பம், மிகப் பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. சேவைகளைத் திறமையான முறையில் வழங்கவும், ஆளுகைக்கும், இது வழிவகுத்துள்ளது. கல்வியிலிருந்து சுகாதாரம் வரை பல்வேறு துறைகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவி விரிந்துள்ளது. வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதிலும் இது உதவிகரமாக உள்ளது. இது போன்ற வழிமுறைகள், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள், முக்கிய பங்கு வகிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவில் பார்க்கும்போது, சமமான உலகை உருவாக்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளுக்கு இணையாகப் போட்டி  போடவும் வழி வகை செய்துள்ளது.

நண்பர்களே,

     தொழில்நுட்பம் பல்வேறு தடைகளைத் தகர்ந்தெறிந்துள்ளது. உலகம் ஒரே குடும்பம் என்ற இந்தியத் தத்துவத்தை  உணர்த்துவதாகவும் உள்ளது. மேலும், நமது பழமையான, உள்ளார்ந்த பாரம்பரியத்தையும் இது பிரதிபலிக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம், உணர்வுகளுக்கும், உண்மையிலேயே ஜனநாயக மாண்புகளுக்கும் அர்த்தம் கொடுக்கப்படுகிறது.

     இந்தியாவில் உள்ள நாம், தொழில்நுட்பத்தின் மனித முகத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். டிஜிட்டல் அணுகுமுறை மூலம் அதிகாரம் அளிப்பது என்ற மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம். தொழில்நுட்பம் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உலகின் மிகப்பெரிய இயக்கமாக உருவெடுத்துள்ள ”டிஜிட்டல் இந்தியா”, மக்களுக்கு டிஜிட்டல் சேவைகளை வழங்கவும் உதவிகரமாக உள்ளது. மக்களுக்கு அதிகாரம் வழங்க கைபேசிகளையும் பயன்படுத்திவருகிறோம்.

      தனிநபர்களின் அடையாளங்களை அறிந்துகொள்ள உதவும், ஆதார் பற்றி உங்களில் பெரும்பாலானோர் அறிவீர்கள் என நம்புகிறேன்.  வரிசைகளில் மக்கள் காத்துக்கிடப்பதிலிருந்தும், அலைக்கழிக்கப்படுவதிலிருந்தும் விடுவிப்பதற்கு ஆதாரைப் பயன்படுத்துகிறோம். மூன்று விஷயங்கள்: முதலாவதாக, ஜன்தன் வங்கிக் கணக்குகள் மூலம் உள்ளார்ந்த நிதி சேவை; இரண்டாவதாக, ஆதாரை அடிப்படையாகக் கொண்ட சேவைகள், மூன்றாவதாக, கைபேசிகளின் பயன்பாடு, ஊழலைப் பெருமளவு கட்டுப்படுத்த உதவியுள்ளது.  இந்த மூன்று சேவைகளையும் ஒருங்கிணைத்து நாம், இதனை j a m என்று அழைக்கிறோம்.  மானிய உதவிகளை வழங்குவதில் இந்த மூன்று சேவைகளும் முறைகேடுகளைக் களைந்து,சுமார் பத்து மில்லியன் டாலர் அளவுக்குச் சேமிப்பு கிடைத்துள்ளது.

      வாழ்க்கையை எளிமைப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பம் எந்த அளவிற்குப் பயன்பட்டுள்ளது என்பதற்குச் சில உதாரணங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

      தற்போது டிஜிட்டல்  தொழில்நுட்பம் மூலம் விவசாயிகள், மண் பரிசோதனை முடிவுகள், நிபுணர்களின் ஆலோசனை மற்றும் விளைபொருட்களுக்கு நல்ல விலை ஆகியவற்றைப் பெற்று வருகின்றனர். இதன் மூலம், வேளாண் வருமானத்தை அதிகரிப்பதிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சிறு தொழில்முனைவோர்கூட அரசின்  மின்னணுச் சந்தை  முறையில் பதிவு செய்து, அரசுக்குப் பொருட்களை வழங்குவதில்  போட்டி போட முடியும். அதன் அடிப்படையில் வர்த்தகத்தை விரிவுப்படுத்தி, அரசின் கொள்முதல் செலவினங்களைக் குறைப்பதிலும் பங்காற்ற முடியும். இது திறமையை அதிகரிக்கவும், அரசின் நிதிக்கு அதிக மதிப்பை ஏற்படுத்தவும் வழி வகுக்கும்.  

      ஓய்வூதியம் பெறுவோர், வாழ்நாள் சான்றிதழுக்காக இனி வங்கி  அதிகாரிகள் முன்பாகக் காத்துக்கிடக்கத் தேவையில்லை. தற்போது ஓய்வூதியதாரர்கள் சிரமம் இல்லாமல் தங்களது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி இந்தச் சான்றிதழை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

     தகவல்தொழில்நுட்பப் பணியாளர்களில், பெண்கள், குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றனர். பெண்கள் பல்வேறு புதிய தொழில்களைத் தொடங்கவும், டிஜிட்டல் தொழில்நுட்பம்  வழி வகுத்துள்ளது. அந்த வகையில் தகவல்  தொழில்நுட்பத்துறை  பாலின அதிகாரமளித்தலுக்கு முக்கிய பங்காற்றிவருகிறது.

      இந்திய மக்கள் ரொக்கமில்லா பணபரிவர்த்தனையில் அதிக அளவில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்காகவே பீம் செயலியை உருவாக்கியுள்ளோம். இந்த செயலியானது குறைந்த அளவிலான ரொக்கப்பரிவர்த்தனைக்கும், ஊழலில்லா சமூகத்திற்கும்  உதவுகிறது.

      ஆளுகையை மேம்படுத்துவதில், தொழில்நுட்பத்தின் சக்தியை இவை எடுத்துரைக்கின்றன.

நண்பர்களே,

    பங்களிப்பு ஆளுகைக்கும் நாம் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் மே 2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது, பெரும்பாலான மக்கள் - குறிப்பாக இளைஞர்கள் - தேசத்திற்காகப்  பாடுபடவும், கருத்துக்களைப் பரிமாறவும் விருப்பம் தெரிவித்தனர். லட்சக்கணக்கான இந்தியர்களின் புதிய சிந்தனைகள், நாட்டைப் புதிய உச்சத்திற்கு அழைத்துச்செல்ல உதவும் என்பது எங்களது திடமான நம்பிக்கையாகும்.

      எனவே, குடிமக்கள் பங்கேற்கும் "மை கவ்" என்ற இணையதளத் தகவைத் தொடங்கினோம். இதன் மூலம், மக்கள்  நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் பற்றிய தங்களது எண்ணங்களையும், சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ள வழிவகை ஏற்பட்டுள்ளது. பல்வேறு முக்கியக் கொள்கைகள் தொடர்பாக, பயனுள்ள ஆயிரக்கணக்கான  ஆலோசனைகள் வரப்பெற்றுள்ளன.  அரசின் பல்வேறு முன்முயற்சிகளுக்கான இலச்சினைகள் மற்றும் முத்திரைகள், மக்கள் தெரிவித்த யோசனைகள் மற்றும் மை கவ்  தகவின் மூலம் நடத்தப்பட்ட போட்டிகள் வாயிலாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதமர் அலுவலகத்திற்கான அதிகாரபூர்வ செயலி கூட, மை கவ் என்ற தகவின் மூலம் நடத்தப்பட்ட போட்டி வாயிலாக அறிவார்ந்த இளைஞர்களிடமிருந்து பெறப்பட்ட யோசனைகள் மூலமே உருவாக்கப்பட்டது. தொழில்நுட்பம் ஜனநாயகத்தை எந்த அளவிற்கு வலுப்படுத்துகிறது என்பதற்கு "மை கவ்" தகவு சிறந்த உதாரணமாகும்.

    இப்போது நாம் மற்றொரு உதாரணத்திற்குச் செல்வோம். மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, அரசாங்கச் செயல்பாடுகளில் ஏற்படும் தேவையற்ற தாமதமும், கொள்கைமுடிவுகளில் கவனம் செலுத்தாததும், அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை  நான் அறிந்துகொண்டேன். எனவே, அரசு திட்டங்களைக் குறித்த காலத்தில் செயல்படுத்துவதற்கான பிரகதி என்ற இணையவெளித் திட்டத்தைத் துவக்கினோம். பிரகதி என்றால் இந்தி மொழியில் முன்னேற்றம் என்று பொருள்படும்.

    ஒவ்வொரு மாதமும் கடைசி புதன்கிழமைகளில் மத்திய- மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகளைப் பிரகதி கூட்டங்கள் மூலம் சந்தித்துவருகிறேன். தொழில்நுட்பம் தாமதத்தை உடைத்தெறிந்தது. நமது அலுவலகங்களில் இருந்தபடியே இணையஉலகின் உதவியுடன், நாங்கள் பல்வேறு முக்கிய அரசு விவகாரங்கள் குறித்து விவாதித்து தீர்வு காண்கிறோம். நாட்டுநலன் கருதி, கருத்தொற்றுமை மூலம், விரைவாக முடிவெடுப்பதற்கும் பிரகதி கூட்டங்கள் பயன்படுகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகார வர்க்கத்தின் சிவப்புநாடா முறையில் பாதிக்கப்பட்ட, பல நூறு கோடிரூபாய் மதிப்புள்ள கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றங்களை அறிந்துகொள்ளவும் பிரகதி உதவுகிறது.

 

     நமோ செல்போன் செயலி மூலம் நானே சில முயற்சிகளைச் சொந்தமாகவும் மேற்கொண்டேன். இந்தச் செயலி மக்களுடனான எனது தொடர்பை அதிகப்படுத்தியது. இந்தச் செயலி மூலம் எனக்குக் கிடைத்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.

     தற்போது நாங்கள் யுமாங் செல்போன் செயலியைத் தொடங்கியுள்ளோம். இது நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் நலன் சார்ந்த சேவைகளை வழங்கிவருகிறது. மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு துறைகளுக்கான சேவைகளையும் இந்தச் செயலிகள் வழங்கிவருகின்றன.

குடிமக்களை மையப்படுத்திய நூற்றுக்கும் மேற்பட்ட சேவைகளை அளிக்கும் உமாங் மொபைல் செயலியை நாம் இன்று அறிமுகப்படுத்திஉள்ளோம். இந்தச் சேவைகள் அனைத்தையும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகள் அளிக்கும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை இந்தத் துறைகளின் செயல்பாடுகளில் உள்ள மோசமான செயல்திறன் குறித்த வெளிப்பாட்டைத் தானாக அளிக்கும்.

நண்பர்களே,
நமது அனுபவங்களையும் வெற்றிகளையும் உலகளாவிய சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். மறுபுறம் கல்வி மற்றும் சுகாதாரத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அளவிடத்தக்க மாதிரிகள் மற்றும் புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இணையவெளியை மாற்றுத் திறனாளிகளுக்குச் சாத்தியமானதாக ஆக்கவும் நாம் விரும்புகிறோம். சமீபத்தில் அமைச்சகங்கள் தெரிவித்த நாட்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கடந்த முப்பத்தி ஆறு மணி நேர ஹாக்கத்தானின் போது மாணவர்கள் தெரிவித்தனர். உலகளாவிய அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளில் இருந்து பாடம் பயில நாம் தயாராக இருக்கிறோம். நாம் அனைவரும் இணைந்து வளரும் போது தான் முன்னேற்றம் ஏற்படும் என நாம் நம்புகிறோம்.
புதுமைக்கான ஒரு முக்கியப் பகுதியாக இணைப்புவெளி திகழ்கிறது. இன்று நமது ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்கள் அன்றாடப் பொதுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு அளிப்பதிலும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தியாவின் ஸ்டார்ட் அப் தொகுப்பில் உள்ள தீவிரமான வாய்ப்புகளை அங்கீகரிக்க உலகளாவிய முதலீட்டாளர் சமூகம் காத்துக்கொண்டிருக்கின்றது என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். இந்த வெளியில் நீங்கள் முதலீடு செய்து இந்திய ஸ்டார்ட் அப்களின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருக்க உங்களை அழைக்கிறேன்.

நண்பர்களே,
இயல்பாகவே இணையதளம் என்பது தனித்திருப்பதன்றி அனைவரையும் உள்ளடக்கியதும் ஆகும். இது அணுகுதலுக்கான சமபங்கையும் வாய்ப்புகளுக்கான சமத்துவத்தையும் அளிக்கிறது. இன்றைய விவாதங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் பயனர்களால் வடிவமைக்கப்படுகின்றன. சமூக ஊடக மேடைகள் இணையவெளியை அனைவரையும் பங்கேற்பாளர்களாக ஆக்குகிறது. சமூக ஊடகங்களில் உயர்த்திக்காட்டப்படும் அனுபவங்கள், தற்போது ஸ்டுடியோக்களில் இருந்து நிபுணர்கள் நமக்குக் கூறும் செய்திகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளன. நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களின் கலவையாக உள்ள இந்த மாற்றத்தை இணைய உலகம் நமது அளித்துள்ளது. இளையதலைமுறை தங்களது படைப்பாற்றல், திறன் தகுதி ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கான மேடையாக இணையதளம் ஆகியுள்ளது. அது புத்திசாலித்தனம் நிறைந்த வலைப்பதிவு, அழகான இசை, கலைப்படைப்பு அல்லது நாடகம் எதுவாக இருந்தாலும் வானமே எல்லையாகி விட்டது.

 
நண்பர்களே,
மாநாட்டின் நோக்க நிலையான 'நீடித்த வளர்ச்சிக்கான பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இணையவெளி“ என்பதும் மனிதகுலத்திற்கு இந்த முக்கியமான சொத்தைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுகிறது. இணையப் பாதுகாப்பு பிரச்சனையை உலகச் சமூகம் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் அணுக வேண்டிய தேவை உள்ளது இணையவெளி தொழில்நுட்பங்கள் நமது மக்களை சாதிக்க வைப்பதாக இருக்க வேண்டும்.


வெளிப்படையான மற்றும் அணுகத்தக்க இணையதளத்திற்கான தேவை பெரும்பாலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இணையதளங்களைச் சேதப்படுத்துவது, மற்றும் முடக்குவது என்பது கடினமான ஒரு பிரச்சினையாகும், இணையத் தாக்குதல்கள் என்பது ஜனநாயக உலகின் மீதான குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்கின்றனர். நமது சமுதாயத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் இணையக் குற்றவாளிகளின் தீய நோக்கங்களுக்கு இரையாகி விடக்கூடாது. இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புநிலை நமது வாழ்க்கை முறையாக வேண்டும்.


இணைய அச்சுறுத்தல்களை முறியடிக்க பயிற்சியும் திறனும் கொண்ட நிபுணர்களின் மீது பெரும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இணைய தாக்குதல்களுக்கு எதிராக இணைய வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஹாக்கிங் என்ற சொல் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஆகியிருக்க கூடும். இணையப்பாதுகாப்பு என்பது கவர்ச்சிகரமானதும் ஏற்கத்தக்கதுமான வாழ்க்கைத் தொழில்வாய்ப்பாக இளைஞர்களுக்குத் திகழ்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

 
டிஜிட்டல் வெளி என்பது சட்டவிரோதச்  சக்திகளான பயங்கரவாதிகளின் விளையாட்டு மைதானமாக ஆகக் கூடாது என்பதில் தேசங்களும் பொறுப்பு எடுத்துக் கொள்ளவேண்டும். எப்போதும் மாறிவரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள பாதுகாப்பு முகமைகள் இடையே தகவல் பகிர்வு மற்றும் ஒருங்கிணைப்பு அவசியமானதாகும்.


தனிமை மற்றும் வெளிப்படைத் தன்மை இடையிலான சிறந்த சமநிலையுடன் நாம் கடக்க முடியும் என்பது ஒருபுறமும், தேசப் பாதுகாப்பு என்பது மறுபுறமும் என்பது நிச்சயம். உலகளாவிய மற்றும் வெளிப்படையான அமைப்புகளின் இடையிலான வேறுபாடுகளை நாம் ஒருபுறம் இணைந்து எதிர்கொள்ள முடியும் என்பதுடன், மறுபுறம் தேச அளவில் குறிப்பிடத்தக்கச் சட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.
 

நண்பர்களே,
உருவாகிவரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத வகையில் நம் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். வெளிப்படைத்தன்மை, அந்தரங்கம், நம்பிக்கை பாதுகாப்பு போன்ற முக்கியக் கேள்விகளுக்குப் பதில் காண்பது அவசியம். டிஜிட்டல் தொழில்நுட்பம் மனித குலத்திற்கு அதிகாரம் அளிக்கச் சேவையாற்றுகிறது. அது தொடர்ந்து அவ்வாறு திகழ்வதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

தொடர்புடைய பலர் அதிக எண்ணிக்கையில் இந்நிகழ்வில் பங்கேற்று இருப்பது, இந்த மேடை உலகளாவிய ஏற்பைப் பெற்றிருப்பதற்கான சான்றாகும். நாடுகள், தொழில்துறை, கல்வித்துறை மற்றும் குடிமைச்சமூகத்தினர் என அனைவரும் முறையான இணைந்த கட்டமைப்பை நோக்கிச் செயலாற்ற வேண்டும். இது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பாதுகாப்பான இணைய வெளியைச் சாத்தியமானதாக்கும்.

நண்பர்களே,
எண்ணிக்கை அடிப்படையில் ஒருவேளை இந்த மாநாடு ஒரு மிகப்பெரிய நிகழ்வாகும். இதற்கான பின்னணி மற்றும் சரக்கு போக்குவரத்து பணிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பிரதிநிதிகள் மென்மையான, சிக்கலற்ற அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள் என நான் நம்புகிறேன்.
பயன் தரக்கூடிய ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மற்றும் வெளிப்பாடுகள் கிடைக்க வாழ்த்தி நான் எனது உரையை நிறைவு செய்கிறேன். உங்கள் அனைவரையும் நான் மீண்டும் வரவேற்று இந்த மாநாடு மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நன்றி.

***

 



(Release ID: 1529014) Visitor Counter : 276


Read this release in: English