குடியரசுத் தலைவர் செயலகம்
ஜாம்பியாவில் இந்தியச் சமுதாயத்தினர் அளித்த வரவேற்பில் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை
प्रविष्टि तिथि:
12 APR 2018 7:40PM by PIB Chennai
ஜாம்பியாவில் வாழும் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆப்பிரிக்காவில் நான் மேற்கொள்ளும் அனைத்துப் பயணங்களையும் அட்டவணைப்படுத்தி பதிவுசெய்வது என்று திட்டமிட்டுள்ளேன். ஆப்பிரிக்க நாடுகள் நமது நெருங்கிய நண்பர்களின் நாடுகளைக் கொண்டவை. அத்துடன் இந்தியாவுடனும் பிணைந்திருப்பவை. அதில் ஜாம்பியாவில் வசிக்கும் இந்தியர்கள் சிறப்பிடம் வகிக்கிறார்கள். உங்களது (இந்தியர்கள்) பங்களிப்பு புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நீங்கள் இந்தியாவின் கலாசாரத் தூதுவர்கள் ஆவீர்கள்.
1964ம் ஆண்டு ஜாம்பியா விடுதலை பெற்றதற்கு முன்பாகவே இந்தியச் சமுதாயத்தினர் இங்கே வாழ்ந்திருக்கிறார்கள். வர்த்தகம், வணிகம், சுரங்கம், விருந்தோம்பல், உடல் நலம், கல்வி என எல்லாத் துறைகளிலும் ஜாம்பியா நாட்டுக்குப் பணியாற்றி வருகிறீர்கள்.
ஆப்பிரிக்க நாட்டில் வசித்த மகத்தான இந்தியர் நிச்சயமாக மகாத்மா காந்தி தான்.. அவர் இந்தியாவுக்கும் ஜாம்பியாவுக்கும் உத்வேகமாகத் திகழ்கிறார். இந்தப் பயணத்தின்போது, ஜாம்பியா அதிபர் லுங்கு, அவரது அரசினர், நாட்டு மக்கள் எனக்கு மிகவும் அன்பான வரவேற்பை அளித்தனர். ஜாம்பியாவின் மிகச் சிறந்த தலைவரான டாக்டர் கென்னத் கவுண்டாவைச் சந்திக்கும் அற்புதமான வாய்ப்பையும் பெற்றேன். இந்தியாவில் மகாத்மாவைப் போற்றுவதைப் போல் அவர் போற்றப்படுகிறார். இதற்குக் காரணமாக, ஜாம்பியாவின் பக்குவம் நிறைந்த தலைவர்களும் இந்தியர்களாகிய நீங்கள் உட்பட நாட்டின் ஒவ்வொரு சமுதாயத்தினரும் இருக்கிறீர்கள். இதுதான் ஜனநாயகம் மேம்படுவதற்கு இதர ஆப்பிரிக்க நாடுகளுக்கே ஜாம்பியா வழிகாட்டியைப் போல் அமைவதற்குப் பின்புலமாக உள்ளது. விழுமியங்களை நமது நாட்டு மக்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். மனித கண்ணியத்திற்கும், சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கும் உள்ள விடுதலையையும் சுதந்திரத்தையும் நம் இரு நாடுகளும் பகிர்ந்துகொள்கின்றன.
நமது அரசு வெளிநாடுகளுடன் நீடித்த மற்றும் முன்னுணர்ந்து செயல்படும் ஈடுபாட்டை விரும்புகிறது. அதற்கான சாத்தியக்கூறுகளையும் உரிய தளங்களையும் ஏற்படுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்ட விவாதத்தைப் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது. அதன் மூலம் இந்தியாவின் மாற்றங்களை அறிந்துகொள்வதுடன் அதில் நீங்கள் பங்களிப்பும் செலுத்தலாம்.
இவ்வாறு குடியரசுத் தலைவர் பேசினார்.
*******
(रिलीज़ आईडी: 1528969)
आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English