பாதுகாப்பு அமைச்சகம்
2018 பாதுகாப்பு கண்காட்சி
Posted On:
12 APR 2018 5:55PM by PIB Chennai
காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் 2018 ஏப்ரல் 11-அன்று பாதுகாப்பு அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட 2018 பாதுகாப்பு கண்காட்சியின் முதலாவது நிகழ்ச்சியில், ராணுவத் தலைமைத் தளபதி ஜென்ரல் பிபின் ராவத் பங்கேற்றார்.
2018 ஏப்ரல் 11-அன்று ராணுவத் தலைமைத் தளபதி 9-வது வான்வெளி மற்றும் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் அவர் “போர்களத் தேவைகளுக்கேற்ப தீர்வுகளை வடிவமைத்தல்: போர்வீர்ர் உரை“ என்ற கருத்தரங்கில் பங்கேற்றார். இதில் பேசிய அவர், இந்திய கல்வி நிறுவனங்களுக்கு பல்வேறு முக்கியமான ஆராய்ச்சி செயல்களில் ஈடுபட்டுள்ளமைக்காக பாராட்டு தெரிவித்தார். உள்நாட்டு தொழில்நுட்பங்களை கிடைக்கச் செய்வதில் பெரிய மாற்றங்களை இந்த ஆராய்ச்சிகள் கொண்டுவரும் என்று அவர் கூறினார். இந்தியப் பாதுகாப்பு உற்பத்தியாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் துறையினர், விஞ்ஞானச் சமுதாயத்தினர் ஆகியோர் இந்தியாவில் தயாரிப்போம் கனவை நனவாக்க எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.
2018 ஏப்ரல் 11-ஆம் தேதியும், 12-ஆம் தேதியும் அரசுகள், அறிவியல் சமுதாயத்தினர், கல்வி நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
“பாதுகாப்பு தொழில்கள் வளாகம் – தொடக்க நிலை நிறுவனங்கள் மற்றும் குறு-சிறு-நடுத்தர தொழில்களுக்கு வாய்ப்புகள் வழங்குதல்“ என்ற கருத்தரங்கில், ராணுவத் தலைமைத் தளபதி தலைமை விருந்தினராக பங்கேற்றார். இந்திய ராணுவம் எதிர்காலப் போர்கள் அனைத்தையும் உள்நாட்டு யுக்திகள் மூலம் வெல்லும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இத்தகைய தீர்வுகளுக்கு இந்திய ராணுவம் தொழில்துறையினரை வழிநடத்தும் என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டுமயமாக்குதலில் வினையூக்கியாக இந்திய ராணுவம் செயல்படும் என்று தெரிவித்த ராணுவத் தலைமைத் தளபதி, அது விரைவான நவீனமயமாக்கலை முழுமையாக ஆதரிக்கும் என்று கூறினார்.
-------
(Release ID: 1528919)
Visitor Counter : 137