பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மகாராஷ்டிராவின் ரத்தினகிரி மாபெரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியக் கூட்டமைப்பும், சவுதி அராம்கோ நிறுவனமும் கையெழுத்திட்டன
Posted On:
11 APR 2018 12:30PM by PIB Chennai
மகாராஷ்டிராவின் ரத்தினகிரி எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் ஒருங்கிணைந்த மாபெரும் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல் கெமிக்கல் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியக் கூட்டமைப்பும், சவுதி அராம்கோ நிறுவனமும் இன்று (11.04.2018) புதுதில்லியில் கையெழுத்திட்டன.
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒத்துழைப்பு காரணமாக்க் கச்சா எண்ணெய் வழங்குதல், ஆதாரங்கள், தொழில்நுட்பங்கள், அனுபவம், உலகின் வர்த்தகத்தில் பெயர் பெற்றுள்ள இந்தப் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களின் நிபுணத்துவம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்பட உள்ளன.
மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு, திறன் மேம்பாடு, தொழில் முனைவுத் திறன் அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், இந்தத் திட்டம் ரூ.3 லட்சம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்போது இந்த மண்டலத்திலும், மகாராஷ்டிராவிலும், நாடு முழுமைக்கும் மிகப் பெரிய பலன்களைக் கொண்டுவரும் என்றார். பெரிய அளவு வேலைவாய்ப்பு ஒட்டுமொத்தப் பொருளாதார மேம்பாடு ஆகியவை இந்த மண்டலத்திற்குக் கிடைக்கும் என்றார் அவர்.
(Release ID: 1528642)
Visitor Counter : 199