பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறையில் வர்த்தகம் புரிதலை எளிதாக்குவதை உயர்த்துதல்

Posted On: 11 APR 2018 2:02PM by PIB Chennai

சர்வதேச போட்டி ஏலத்திற்கு (ஐ.சி.பி.) பிறகு பகுதிகள்/ஒப்பந்தப் பரப்புகள் ஆகியவற்றை வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்களுக்கு எச்.இ.எல்.பி./ஒ.ஏ.எல்.பி.-ன் கீழ் ஒப்புதல் வழங்குவதற்கு பெட்ரோலியம், இயற்கை வாயு அமைச்சர் மற்றும் நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்கும் நடைமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல்

வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல் என்ற அரசின் திட்டத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை பெட்ரோலியம், இயற்கைவாயு அமைச்சர் மற்றும் நிதியமைச்சருக்குச் சர்வதேசப் போட்டி ஏலத்திற்கு (ஐ.சி.பி.) பிறகு பகுதிகள்/ஒப்பந்தப் பரப்புகள் ஆகியவற்றை வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்களுக்கு ஹைட்ரோ கார்பன் துரப்பணம் மற்றும் உரிமக் கொள்கையின் (எச்.இ.எல்.பி). கீழ் அதிகாரம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. அதிகாரம் பெற்ற அமைச்சர்கள் குழு (இ.சி.எஸ்) பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை அமைச்சரவை எடுத்தது. எச்.இ.எல்.பி திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பகுதிகள் ஏலம் மூலம் வழங்கப்பட வேண்டும். எனவே இவ்வாறு அமைச்சர்களுக்கு அதிகாரம் வழங்குவதால் பகுதிகளை ஏலதாரருக்கு வழங்குவதற்கான நடைமுறையில் முடிவெடுத்தல் பணி விரைவுபடுத்தப்படும். மேலும் வர்த்தகம் புரிதலை எளிதாக்கும் திட்டத்திற்கும் உத்வேகம் கிடைக்கும்.

தாக்கம்:

என்.இ.எல்.பி. கொள்கையின் கீழ், இ.சி.எஸ். அமைப்பு ஏல மதிப்பீடு தரத்தை (பி.இ.சி.) பரிசீலிக்கிறது, தேவைப்படும்போது ஏலதாரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துகிறது, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (சி.சி.இ.ஏ.)-க்கு பகுதிகள் வழங்குவதற்கான பரிந்துரையை அளிக்கிறது. (சி.சி.இ.,ஏ) பகுதிகள் வழங்குவதற்கு அனுமதியை அளிக்கிறது. அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனை (ஐ.எம்.சி.) உள்ளிட்ட இந்த அனைத்து நடைமுறைகளும் மிகவும் எளிதாகவும், அதிக காலம் பிடிப்பதாகவும் உள்ளன. அரசின் திட்டமான வர்த்தகம் புரிதலை எளிதாக்கும் திட்டத்தின்படி இந்தக் காலஅவகாசத்தைக் குறைப்பது விரும்பத்தக்கது. புதிய ஹைட்ரோ கார்பன் துரப்பணம் மற்றும் உரிமக் கொள்கையின்படி ஏல நடைமுறை தொடர்ச்சியானதாக இருக்கும். ஏலத்திற்கான பகுதிகள் ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும்.

பின்னணி:

2016-ம் ஆண்டு மத்திய அரசு துரப்பணம் மற்றும் உற்பத்தித் துறையில் ஹைட்ரோ கார்பன் துரப்பணம் மற்றும் உரிமக் கொள்கை என்ற புதிய கொள்கையைத் தொடங்கியது. இது முந்தைய கொள்கை அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்தப் புதிய கொள்கையின் முக்கிய அம்சங்கள், வருமானப் பகிர்வு ஒப்பந்தம், மரபு சார்ந்த, மரபு சாராத ஹைட்ரோ கார்பன் ஆதாரங்களின் துரப்பண மற்றும் உற்பத்திக்கு ஒரே உரிமம், சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணயத்தில் சுதந்திரம் போன்றவை ஆகும். எச்.இ.எல்.பி. திட்டத்தின் கீழ் திறந்த பரப்பு உரிமக் கொள்கை முக்கியமான புதுமை அம்சமாகும். இந்த அம்சத்தின்படி முதலீட்டாளர் தங்களுக்கு ஆர்வம் உள்ள பகுதிகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம், அதன் அடிப்படையில் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துவதற்கான இ.ஓ.எல். ஆவணத்தை ஆண்டு முழுவதும் சமர்ப்பிக்கலாம். எந்தப் பகுதிக்கான ஆர்வம் தெரிவிக்கப்பட்டதோ அதன் அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒரு முறை ஏலம் நடத்தப்படும்.

2017 ஜூலை 1-ஆம் தேதி தொடங்கிய ஓ.ஏ.எல்.பி.யின் முதலாவது சுற்று இ.ஓ.எல்.-க்கு மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் அரசிடம் பெறப்பட்டன. இந்தச் சுற்று 2017 நவம்பர் 15-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. ஏலத்தின் முதலாவது சுற்றில் 11 மாநிலங்களைச் சேர்ந்த 59,282 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள 55 பகுதிகள் ஏலத்திற்கு வந்தன. ஏல நடைமுறை பாதுகாக்கப்பட்ட, அர்ப்பணிக்கப்பட்ட மின்னணு ஏல வலைத்தளத்தின் மூலம் நடைபெற்றது.

-----



(Release ID: 1528629) Visitor Counter : 222


Read this release in: English , Telugu , Malayalam