ரெயில்வே அமைச்சகம்

ரயில்வேக்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 10 APR 2018 3:37PM by PIB Chennai

ரயில்வேயில் டீசல் பயன்பாடு மற்றும் மின்சாரம் / எரிபொருள் சிக்கனத்தை கொண்டுவர பல்வேறு நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

  1. அனைத்து பெரிய ரயில்வே நுகர்வோர் டிப்போக்களிலும் குறைந்தபட்ச இருப்பு நிலவரம் 15 நாட்கள் என்பதிலிருந்து 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
  2. B-5 வகை கலவை செய்யப்பட்ட உயர்வேக டீசல் பயன்பாடு அனைத்து எஞ்ஜின்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
  3. ஒவ்வொரு பயணத்தின் ரேஷன் அளவுகளும் முறையாக ஆய்வு செய்யப்படுகின்றன.
  4. ரயில் எஞ்ஜின் ஓட்டுனர்கள் செயல் திறன் முறையாக கண்காணிக்கப்படுகிறது.
  5. டீசல் ரயில்களில் எஞ்ஜின் வெறுமனே ஓடிக் கொண்டிருப்பதை தவிர்க்க ரயில்வே வாரிய நிலையில் கூட்டு நடவடிக்கை உத்தரவு கூட்டாக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  6. எரிபொருள் நிரப்பும் முறை சீரமைக்கப்பட்டு அமல்படுத்தப்படுகிறது.
  7. அனைத்து பழையதாகிப்போன அகல ரயில் பாதை டீசல் கலப்பு போக்குவரத்து எஞ்ஜின்கள் அனைத்தும் முக்கியப் பாதை சேவைகளிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.
  8. டீசல் இ.எம்.யு. ரயில்களில் இயக்க சக்தி பெட்டியை டீசல் இயக்கத்திலிருந்து அதற்கு பதிலாக சி.என்.ஜி.க்கு மாற்றி இயக்குதல் தொடங்கியுள்ளது.
  9. டீசல் எஞ்ஜின்களில் துணை மின்சக்திப் பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
  10. எரிபொருள் சிக்கனத்தை அடைவதற்காக டீசல் எஞ்ஜின்களில் மைக்ரோ புரோசசர் அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
  11. டீசல் எஞ்ஜின்களில் பொதுவான ரயில் மின்னணு நேரடி செலுத்துதல் அமைப்பு உருவாக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
  12. எரிபொருள் சிக்கனத்தை அடைய ஆல்கோ எஞ்ஜின்களில் மில்லர் சைக்கிள் அடிப்படையிலான டர்போ சார்ஜர்கள் மற்றும் மாறியமையும் டர்பைன் ஜியோமெட்ரி டர்போ சார்ஜர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாநிலங்களவையில் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்

=============


(रिलीज़ आईडी: 1528540) आगंतुक पटल : 237
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English