பிரதமர் அலுவலகம்

நேபாளப் பிரதமர் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட போது (07.04.2018) வெளியிடப்பட்ட இந்தியா-நேபாளக் கூட்டு அறிக்கை

Posted On: 07 APR 2018 4:05PM by PIB Chennai

நேபாளப் பிரதமர் ரைட் ஹானரபிள் திரு. கே.பி. சர்மா ஒளி, இந்தியாவில் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் 2018, ஏப்ரல் 6 –ம் தேதி முதல் 8 –ம் தேதி வரை பயணம் மேற்கொண்டார்.

2018, ஏப்ரல் 7 –ம் தேதி .இரண்டு பிரதமர்களும் இரண்டு ஆண்டுகளுக்கு இடையேயான பன்முகத்தன்மை கொண்ட உறவுகளின் அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்தனர். இரண்டு அரசுகள், தனியார் துறையினர் மக்கள் நெறிகளில் இரு நாடுகளுக்குமிடையே வளர்ந்துவரும் ஒத்துழைப்பை அவர்கள் வரவேற்றனர். சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் நன்மைகள் அடிப்படையில் இருதரப்பு உறவுகளைப் புதிய உயர்ந்தநிலைக்கு கொண்டு செல்ல சேர்ந்து உழைப்பது என்று இரு பிரதமர்களும் தீர்மானித்தனர்.

பகிர்ந்துகொள்ளப்பட்ட வரலாற்று, பண்பாட்டு இணைப்புகள், நெருக்கமான மக்களுக்கு இடையே தொடர்புகள் ஆகியவற்றின் வலுவான அடித்தளத்தின் மீது இந்தியா-நேபாள உறவுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவு கூர்ந்த இரண்டு பிரதமர்களும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உயர்நிலை அரசியல் பரிவர்த்தனைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.

இந்தியாவுடன் நட்பான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தமது அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகப் பிரதமர் திரு. ஒளி குறிப்பிட்டார். இந்தியாவின் வளர்ச்சி மற்றும் வளம் ஆகியவற்றிலிருந்து பலனடையும் வகையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நேபாள அரசு விரும்புவதாக அவர் கூறினார். நேபாள அரசின் முன்னுரிமைகளின்படி நேபாளத்துடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் திரு. ஒளியிடம் பிரதமர். திரு. நரேந்திர மோடி உறுதி அளித்தார்.

அனைத்தையும் உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் வளம் குறித்த பகிர்ந்து கொள்ளப்பட்ட நெடுநோக்கை தனது அண்டை நாடுகளுடனான உறவுகளில் வழிகாட்டுக்கட்டமைப்பாக இந்தியா கொண்டுள்ளது என்பதற்கு அதன் தொலை நோக்கான அனைவருடன் இணைந்து அனைவருக்கும் வளர்ச்சி என்பது அடையாளமாக அமைந்துள்ளது என்று பிரதமர் திரு. மோடி கூறினார். நேபாள அரசு குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றத்திற்குப் பிறகு பொருளாதார மாற்றத்திற்கு முன்னுரிமை அளித்துவருகிறது என்பதற்கு அந்நாட்டின் முதல் நெறியான, வளமான நேபாளம், நலமான நேபாளி என்பது அமைந்துள்ளது என்று பிரதமர் திரு. ஒளி கூறினார். நேபாளத்தில் உள்ளூர் நிலை, நாடாளுமன்ற நிலை, முதலாவது மாகாண நிலை, தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியதற்காக நேபாள அரசுக்கும் மக்களுக்கும் பிரதமர் திரு. மோடி பாராட்டுக்களைத் தெரிவித்ததுடன் அவர்களது ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டுத் தொலைநோக்கிற்காகவும் பாராட்டு தெரிவித்தார்.

நேபாளத்தின் பிர்கன்ஞ் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை இரு பிரதமர்களும் திறந்துவைத்தனர். இதனை விரைவாகச் செயல்நிலைக்குக் கொண்டுவருவதால் எல்லை கடந்த வர்த்தகம் மேம்பாடு அடைந்து பொருட்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து அதிகரித்து பகிர்ந்துகொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அதிக வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்றனர்.

இந்தியாவில் அமைந்துள்ள மோதிஹரி என்ற இடத்தில் எல்லைப்பகுதி பெட்ரோலியப் பொருட்கள் குழாய் பாதையான மோதிஹரி-அம்லேக்கன்ஞ் குழாய்ப் பாதைக்கு உரிய பூமிபூஜையை இரு பிரதமர்களும் பார்வையிட்டனர்.

நேபாளத்தில் இருதரப்பு திட்ட அமலாக்கத்தை விரைவுப்படுத்துவதன் அவசியத்தை இரு பிரதமர்களும் விலியுறுத்தினார்கள். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அலுவல்பட்டியலை மேம்படுத்தும் தற்போதைய இருதரப்பு அமைப்பிற்குப் புத்துயிர் ஊட்ட வேண்டிய அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

பரஸ்பரம் அக்கறையுள்ள மூன்று தனித்தனியான முக்கியப் விஷயங்கள் குறித்து கூட்டறிக்கைகள் இன்று (07.04.2018) வெளியிடப்பட்டன. (இணைப்புகள் கீழே):

  • இந்தியா-நேபாள்: வேளாண்மை பற்றிய புதிய ஒத்துழைப்பு
  • ரயில் இணைப்புகளை விரிவாக்குதல்: இந்தியாவில் உள்ள ராக்சாலையை நேபாளத்தில் உள்ள காட்மண்டுடன் இணைத்தல்
  • உள்நாட்டு நீர்வழிப்பாதைகள் மூலம் இந்தியா-நேபாளத்திற்கு இடையே புதிய இணைப்புகளை உருவாக்குதல்

இருநாடுகளுக்குமிடையேயான பன்முக ஒத்துழைப்பிற்கு இந்தப் பயணம் புதிய உத்வேகத்தை அளித்திருக்கிறது என்று இரு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர்.

தமக்கு அளிக்கப்பட்ட அழைப்பிற்கும் தமக்கும் தமது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்கும் பிரதமர் திரு. ஒளி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

நேபாளத்திற்கு விரைவில் வருகை தருமாறு பிரதமர் திரு. ஒளி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பினைப் பிரதமர் திரு. மோடி ஏற்றுக்கொண்டார். இந்தியப் பிரதமரின் பயணத் தேதி தூதரக வழிமுறைகள் மூலம் பின்னர் இறுதி செய்யப்படும்.



(Release ID: 1528328) Visitor Counter : 328


Read this release in: English , Marathi