வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
மனிதகுலத்தின் நீடித்த வளர்ச்சியை நோக்கிய எந்தத் தொலைநோக்குத் திட்டத்திற்கும் மனதில் இருத்த வேண்டியது-குறைத்தல்(Reduce), மறுபயன்பாடு (Reuse) , மறுசுழற்சி (Recycle)- என்ற 3 ஆர் (R) சொற்கள் மந்திரமாகும்.
எட்டாவது மண்டல 3 ஆர் (R) அமைப்புக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அனுப்பியுள்ள செய்தி வருமாறு:
प्रविष्टि तिथि:
08 APR 2018 2:21PM by PIB Chennai
“மனிதகுலத்தின் நீடித்த வளர்ச்சியை நோக்கிய எந்தத் தொலைநோக்குத் திட்டத்திற்கும் மனதில் கொள்ள வேண்டியது-குறைத்தல்(Reduce), மறுபயன்பாடு (Reuse) , மறுசுழற்சி (Recycle)- என்ற 3 ஆர் (R) சொற்கள் மந்திரமாகும். உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் அரசு எனச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இந்தப் பொன்னான கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டும். இது கழிவுப்பொருள் மேலாண்மை, நீடித்த வளர்ச்சி என்ற இரட்டைச் சவால்களுக்குத் தீர்வு காண குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யும்” என்று ஆசியா, பசிபிக்கின் எட்டாவது மண்டல 3 ஆர் அமைப்பில் பங்கேற்போருக்கு அனுப்பியுள்ள செய்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
“3ஆர் மற்றும் ஆதாரவளங்களைத் திறமையுடன் பயன்படுத்துதல் மூலம் தூய்மையான நீர், தூய்மையான நிலம், தூய்மையான காற்று என்பதைச் சாதிப்பது ஆசியா-பசிபிக் சமூகங்களின் 21-ம் நூற்றாண்டு தொலைநோக்கு” என்பதை மையக்கருத்தாகக் கொண்டு இந்தூரில் 2018 ஏப்ரல் 9 முதல் 12 வரை ஆசியா-பசிபிக்கின் எட்டாவது மண்டல 3ஆர் அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.
(रिलीज़ आईडी: 1528299)
आगंतुक पटल : 154
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English