மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி அடிப்படை வசதியில் முதலீடுகள் ரைஸ் திட்டத்தின் மூலம் கணிசமாக உயர்த்தப்படும்
Posted On:
05 APR 2018 6:49PM by PIB Chennai
நாட்டில் சுகாதார நிறுவனங்கள் உட்பட முன்னணி கல்வி நிறுவனங்களில் பொது மற்றும் ஆராய்ச்சி அடிப்படை வசதிகளில் முதலீடுகள் கணிசமாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கென அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.1,00,000 கோடி முதலீட்டில் ”கல்வித்துறையில் அடிப்படை வசதி மற்றும் அமைப்புகளுக்கு புத்துயிரூட்டல்” என்ற திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் செயல்படுத்த வேண்டிய இத்திட்டத்திற்கு நிதி அளிப்பதற்கென உயர்கல்வி நிதி முகமை (எச்ஈஎஃப்ஏ) உரிய வகையில் அமைக்கப்படும்.
அரசின் பங்கு மூலதனத்திற்கு கூடுதலாக எச்ஈஎஃப்ஏ மத்திய அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்களின் தேவைகளுக்கென வெளிச்சந்தையிலிருந்தும் நிதியைப்பெற்று பயன்படுத்திக் கொள்ளும்.
மத்திய உதவிபெறும் நிறுவனங்களில் போதிப்பதற்கான உலகத்தர அடிப்படை வசதி வழங்குதல், மிக வலுவான ஆராய்ச்சி சூழலை உருவாக்குதல், ஆராய்ச்சிக் கூடங்களிடையே இணைப்புகளை ஏற்படுத்துதல், உயர்நிலை ஆராய்ச்சிகளுக்கு ஆதரவளிக்க உயர்நிலை சோதனைக்கூடங்களை நிர்மாணித்தல், 2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட புதிய நிறுவனங்களில் (28ல்) கட்டுமானப் பணியை நிறைவு செய்தல், வளரும் பொருளாதாரத்திற்கு ஏற்றபடி எதிர்பார்க்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு அடிப்படை வசதி வழங்குதல் போன்றவற்றிற்கு இந்தத் திட்டத்தில் நிதியுதவி வழங்கப்படும்.
அனுமதியளிக்கப்பட இருக்கும் திட்டங்களில் விவரித்துள்ளபடி நிறுவனங்களின் உள் வருவாயைக் கருத்தில் கொண்டு வெவ்வேறு விதமான நிதி வழங்கும் அமைப்புகள் செயல்படும்.
மாநிலங்களவையில் இன்று (05.04.2018) மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் டாக்டர் சத்யபால் சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.
(Release ID: 1528172)
Visitor Counter : 131