வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு மண்டலத்தில் சாலை கட்டமைப்பு மேம்பாடு
प्रविष्टि तिथि:
05 APR 2018 6:26PM by PIB Chennai
வடகிழக்கு மண்டலத்திற்கென சிறப்பு விரைவாக்கப்பட்ட சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. வடகிழக்கு மண்டலத்தின் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்தத் திட்டத்திற்கு 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் மத்திய சாலைபோக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் சமீபத்தில் ஒப்புதல் அளித்த 2017-18 முதல் 2021-22 வரையிலான 5 ஆண்டு காலத்திற்கான பாரத் மாலா பரியோஜனா திட்டத்தின் முதற்கட்டத்தில் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்த சாலைகள் மொத்தம் 3,528 கிலோமீட்டர் மேம்பாட்டுக்கென இணைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று (05.04.2018) கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இத்தகவலைத் தெரிவித்தார்.
(रिलीज़ आईडी: 1528166)
आगंतुक पटल : 151
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English