பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 APR 2018 6:30PM by PIB Chennai
16-ஆவது சர்வதேச எரிசக்தி அமைப்பின் அமைச்சர்கள் கூட்டத்தை 2018 ஏப்ரல் 10 முதல் 12 – ந் தேதி வரை புதுதில்லியில் இந்தியா நடத்துகிறது. ஏப்ரல் 11-ந் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி முறைப்படி இந்தக் கூட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்தக் கூட்டத்தில் 42 நாடுகளின் பெட்ரோலிய அமைச்சர்கள் கலந்துக் கொள்கிறார்கள். 2 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் சர்வதேச எரிசக்தி அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம், எரிசக்தி அமைச்சர்கள் கலந்து கொள்ளும் உலகின் மிகப் பெரிய கூட்டமாகும். இதில் உலக எரிசக்தி விவகாரங்கள் குறித்து விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் நடைபெறும். இந்தக் கூட்டங்களில் நாடுகளுக்கு இடையே அரசியல் மற்றும் தொழில்நுட்ப மட்டத்திலான சாதாரண பேச்சுவார்த்தைகள் நடைபெறும். நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் கொள்கை மற்றும் மூலதன முடிவுகள் மேம்படுத்தப்படும். வெளியுறவு அமைச்சர் திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் ஏப்ரல் 12-ந் தேதி கூட்டத்தில் நிறைவுரையாற்றுவார்.
உலக எரிசக்தி பாதுகாப்பு, நீடித்த உள்ளீடான வளர்ச்சி, எளிதில் அணுகக் கூடிய கட்டுப்படியான விலையில் எரிசக்தி பெறுவது, எரிசக்தித் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதில் நிதி மற்றும் சட்டரீதியான சீர்திருத்தங்களை மேற்கொள்வது உட்பட சவால்களை எதிர்கொள்வது மற்றும் இதர முக்கிய விஷயங்கள் பற்றி இந்த மாநாட்டின் அமர்வுகளில் விவாதிக்கப்படும்.