ஜவுளித்துறை அமைச்சகம்

கைவினைக் கலைஞர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டம்

Posted On: 05 APR 2018 4:31PM by PIB Chennai

கைவினைப் பொருட்கள் துறையில் தரம்வாய்ந்த, பயிற்சிமிக்க தொழிலாளர்களை உருவாக்குவதற்கு கைவினைக் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஜவுளி அமைச்சகத்தின்கீழ் உள்ள மேம்பாட்டு ஆணையர் (கைவினைப் பொருட்கள்) அலுவலகம், மனித வள மேம்பாட்டுத் திட்டத்தை வடிவமைத்துள்ளது. இந்திய கைவினைப் பொருட்கள் கையால் உருவாக்கப்படும் நிலையில் சீனாவும் மற்ற நாடுகளும் இத்தகைய பொருட்களை பெரும்பாலும் இயந்திரமயமாக்கிவிட்டன. இந்தியாவில் உள்ள கைவினைக் கலைஞர்கள் உலகச் சந்தையில் போட்டியிடும் அளவுக்கு திறமையும், சிறந்த சாதனங்களையும் பெற்றிருப்பவர்கள். மக்களவையில் இன்று (05.04.2018) எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜவுளித்துறை இணையமைச்சர் திரு. அஜய் தாம்தா இந்தத் தகவலைத் தெரிவித்தார். இத்தகைய 141 திட்டங்கள் வடிவமைப்பு மற்றும் பொருட்கள் மேம்பாட்டுக்கான தேசிய மையத்தால் அமலாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2017-18 காலத்தில் 2800-க்கும் அதிகமான கைவினைக் கலைஞர்கள் பயனடைந்துள்ளனர்.

மேம்பாட்டு ஆணையர் (கைவினைப் பொருட்கள்) அலுவலகத்தின் விரிவான கைவினைப் பொருட்கள் பெருந்தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட கைவினைக் கலைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் கைவினைப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு சபை மூலம் நரசப்பூர், ஜோத்பூர் பெரும் தொழிற்பேட்டைகளில் செயல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் மக்களவையில் தெரிவித்தார்.



(Release ID: 1528013) Visitor Counter : 211


Read this release in: English