கலாசாரத்துறை அமைச்சகம்
அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 100 முக்கிய நினைவிடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள்: டாக்டர் மகேஷ் ஷர்மா
Posted On:
04 APR 2018 6:21PM by PIB Chennai
அடையாளம் கண்டறியப்பட்டுள்ள 100 முக்கிய நினைவிடங்களில் ஓய்வு அறைகள், குடிநீர், அமரும் பலகைகள், புத்தக கடைகள், மொழி மாற்று மையங்கள், உணவகங்கள் போன்று சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த இடங்களை நன்கு பார்வையிட வசதியாக குடிநீர், வருகையாளர் பதிவேடுகள், கழிப்பறைகள், நடைமேடைகள், மொழி மாற்று மையங்கள் போன்ற வசதிகளும் செய்துத் தரப்படும்.
தமிழ்நாட்டில் மகாபலிபுரம் கடற்கரைக் கோயில், தஞ்சை பெரிய போவில், வேலூர்க் கோட்டை, சித்தன்னவாசல் குகை ஓவியங்கள், செஞ்சிக் கோட்டை, சுற்றியுள்ள சிறு கோயில்கள், கற்சுவர்கள், வடகிழக்கு மூலையில் கற்சுவர்களை கொண்ட கிணறு ஆகியவற்றுடன் மூவர் கோயில், காஞ்சிபுரம் கைலாசநாதர் ஆலயம் ஆகியவை மத்திய அரசால் பாதுகாக்கப்படும். வரலாற்று சின்னங்களில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள முக்கியமான சின்னங்களில் அடங்கும்.
மாநிலங்களவையில் இன்று (04.03.2018) எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரத் துறை (தனிப்பொறுப்பு), சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களின் பட்டியலுக்கு www.pib.nic.in இணையத் தளத்தை காணவும்.
(Release ID: 1527863)
Visitor Counter : 169