நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வளர்ச்சிக்கான முதல்படியாக தூய்மை உள்ளது: திரு. சி.ஆர். சவ்தாரி
2018 பிப்ரவரி 16 முதல் 28 வரை நடத்தப்பட்ட தூய்மை இருவார நிகழ்வுகளின்போது பல்வேறு தூய்மைப் பிரச்சார செயல்பாடுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் திரு. சவ்தாரி வழங்கினார்
प्रविष्टि तिथि:
04 APR 2018 6:13PM by PIB Chennai
வளர்ச்சிக்கு முதல்படியாக இருப்பது தூய்மை என்றும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் தூய்மைப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய உணவு, நுகர்வோர் நலன் மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் திரு.சி.ஆர்.சவ்தாரி தெரிவித்துள்ளார். புதுதில்லியில் இன்று (04.04.2018) 2018 பிப்ரவரி 16-லிருந்து 28 வரை நடைபெற்ற தூய்மை இருவார நிகழ்வுகளின்போது பல்வேறு தூய்மைப் பிரச்சாரச் செயல்பாடுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியபோது திரு. சவ்தாரி இவ்வாறு கூறினார்.
எப்.சி.ஐ., சி.டபிள்யு.சி., சி.ஆர்.டபிள்யு.சி. ஆகியவற்றில் மிகத் தூய்மையான கிடங்கிற்கு கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்தத் துறையில் மிகவும் தூய்மையான பிரிவுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. தூய்மை பற்றி கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தத் துறையில் தூய்மையை பராமரிப்பதில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்த ஒப்பந்தப் அடிப்படையிலான துப்புரவு பணியாளர்களும் பாராட்டப்பட்டனர். உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் திரு. ரவிகாந்த் மற்றும் துறையின் பிற அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
உணவு, நுகர்வோர் நலன், பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு. சி.ஆர். சவ்தாரி, உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் திரு. ரவிகாந்த் ஆகியோர் முன்னிலையில் இந்தத் துறையின் அலுவலர்களுக்கு தூய்மை உறுதிமொழி செய்து வைத்ததன் மூலம் தூய்மை இருவார விழாவை மத்திய உணவு, நுகர்வோர் நலன், பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் தொடங்கி வைத்தார். தூய்மை உறுதிமொழி ஏற்பை தொடர்ந்து க்ரிஷி பவன் வளாகத்தில் தூய்மைப் பணிகள் திரு. ராம்விலாஸ் பாஸ்வான், திரு. சி.ஆர்.சவ்தாரி, திரு.ரவிகாந்த் மற்றும் இந்தத் துறையின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டன.
2018 பிப்ரவரி 16-லிருந்து 28 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மை இருவார விழாவின் போது தூய்மை உறுதிமொழி, தூய்மை குறித்த நாடகம், தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணி, வீதி நாடகம், பழைய பதிவேடுகளின் பதிவு மற்றும் ஆய்வு, கட்டுரை எழுதும் போட்டி போன்ற பல்வேறு நிகழ்வுகள் தலைமையிட அலுவலகங்களிலும் இந்தத் துறையின் நிறுவனங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடத்தப்பட்டன.
(रिलीज़ आईडी: 1527861)
आगंतुक पटल : 190
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English