மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர், உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய நிறுவனத் தரவரிசைப் பட்டியல் 2018-ஐ வெளியிட்டார்.

பொறியியல் கல்லூரிகளில் சென்னை ஐ.ஐ.டி., மேலாண்மைப் பிரிவில் அகமதாபாத் ஐ.ஐ.எம். முதலிடம் பிடித்தன

Posted On: 03 APR 2018 7:50PM by PIB Chennai

உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு இடையே போட்டியை உருவாக்கி உலகத்தரத்திலான  கல்வி நிறுவனங்களாக அவற்றை மாற்றும் நோக்கத்துடன் நாடு முழுவதும் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல் 2016-ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேசிய அளவில்  இந்தாண்டுக்கான உயர்க்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர், புதுதில்லியில் வெளியிட்டார்.  ஒன்பது பிரிவுகளில் இடம் பெற்றுள்ள 69 உயர்க்கல்வி நிறுவனங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் சத்யபால்சிங்,  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்க்கல்வித்துறைச் செயலர் திரு. ஆர். சுப்பிரமணியம், தேசிய அங்கீகார வாரியத்தின் தலைவர் திரு.சுரேந்திர பிரசாத், பல்கலைக்கழக மானியக்குழுத் தலைவர் பேராசிரியர் டி பி சிங்,  அகில இந்திய  தொழில்நுட்பக் கல்விக்குழுத் தலைவர் தி்ரு. அனில் சகஸ்ரபுதே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய திரு. பிரகாஷ் ஜவ்டேகர், உயர்க்கல்வி நிறுவனங்களிடையே கல்வியின் தரத்தை மேம்படுத்தி அவற்றுக்கு இடையே போட்டியை உருவாக்கி உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக அவற்றை மாற்றுவதே இந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதன் நோக்கம் என்று கூறினார்.  நாட்டின் மிகச் சிறந்த அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலைத் தேர்வு செய்வதில், தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளை அவர் புகழ்ந்துரைத்தார்.



(Release ID: 1527579) Visitor Counter : 189


Read this release in: English , Marathi