சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

கடந்த 3 ஆண்டுகளில் 120 சாதிகள்/வகுப்புகள் மத்திய இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன

Posted On: 03 APR 2018 6:27PM by PIB Chennai

பிற்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணைய சட்டம் 1993 பிரிவு 9(1)ன் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணைய அறிவுரைப்படி பல்வேறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கான இதர பிற்படுத்தப்பட்டோருக்கான மத்திய பட்டியலில் சாதிகள்/வகுப்பினரை சேர்ப்பதற்கான அறிவிக்கையை இந்திய அரசு வெளியிடுகிறது.

மத்திய சேவைகள் மற்றும் அத்தியாவசிய அளவீடுகளில் சமூக, கல்வி, பொருளாதார பிரதிநிதித்துவம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விதிகள் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் மத்திய பட்டியலில் சாதிகள்/வகுப்புகளை சேர்க்கவும் நீக்கவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் உறுதி செய்கிறது.

கடந்த மூன்றாண்டுகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய பட்டியலில் மொத்தம் 120 நுழைவுகள் இடம்பெறச்செய்யப்பட்டன.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக பதில் அளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. கிருஷ்ண பால் குர்ஜார் இதனைத் தெரிவித்துள்ளார்.

*****


(Release ID: 1527530) Visitor Counter : 268
Read this release in: English