தேர்தல் ஆணையம்

2018-கர்நாடகா சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 126-ல் குறிப்பிட்டுள்ள காலத்தில் ஊடக செய்தி வெளியீடு: 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அனைத்து தற்போதைய பிரிவுகளும் அமலில் இருக்கும், அனைவரையும் கட்டுப்படுத்துவதாகவும் இருக்கும்

प्रविष्टि तिथि: 03 APR 2018 5:39PM by PIB Chennai

   ஊடக மேடைகள் விரிவாகியும் பலதரப்பு தன்மையுடன் பெருகியும் வரும் பின்னணியில் 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126-ல் குறிப்பிட்டுள்ளபடி வாக்குப்பதிவிற்கு முந்தைய 48 மணி நேரத்தில் “தேர்தல் விஷயங்கள்”  வெளியிடப்படுவதை வரன்முறை மற்றும் கட்டுப்படுத்துதலில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கு என தேர்தல் ஆணையம் 2018 ஜனவரியில் உயர்நிலைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் முதுநிலை அதிகாரிகள் தவிர தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய பத்திரிகைகள் சபை, செய்தி ஒளிப்பரப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் தலா ஒரு பிரதிநிதி ஆகியோர் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

  இந்தக் குழு 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126 மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளை ஆராய்ந்து இந்த பிரிவுகள் மீறப்படுவதை, குறிப்பாக தடைசெய்யப்பட்ட காலமான 48 மணி நேரத்தில் கட்டுப்படுத்துவதில் உள்ள கஷ்டங்கள் / குறைபாடுகள் ஆகியவற்றை  ஆராய்ந்து தேவைப்படும் திருத்தங்களை  ஆலோசனை கூறும்.

  இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த உடன் தேர்தல் ஆணையம் இதனை பரிசீலனை செய்து, பிரிவு 126 மற்றும் இதர பிரிவுகளில் தகுந்த திருத்தங்கள் செய்வதற்காக மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கும்.

   அதற்கு முன்னதாக 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் அனைத்து பிரிவுகளும் தொடர்ந்து அமலில் இருக்கும், அனைவரையும் கட்டுப்படுத்தும்.  எனவே, 2018 ஏப்ரல் 3ம் தேதி ஆணையம் தனது பத்திரிகை குறிப்பு எண் ECI/PN/27/2018-ல் வெளியிட்ட நெறிமுறைகள் அனைத்தும் எழுத்திலும்  பொருளிலுமாக தற்போது நடைமுறையில் உள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த ஊடக செய்திகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

விவரம்:

   கர்நாடக சட்டப்பேரவைக்கு  பொதுத்தேர்தல்கள் நடைபெறும் என்று அந்தத் தேர்தலுக்கான கால அட்டவணையுடன் 27.03.2018 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு ஒரே கட்டமாக 12.05.2018 அன்று நடைபெறும்.  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்  1951 பிரிவு 126, ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குப்பதிவு முடிவடைய குறிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரத்தில் எவ்விதமான தேர்தல் விஷயங்களை தொலைக்காட்சி அது போன்ற கருவிகள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் வெளியிட தடை செய்கிறது.

   மேலே குறித்தபடி, 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 126, வாக்குப்பதிவு முடிவதற்கு குறிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முந்தைய 48 மணி நேரத்தில் தடை செய்யப்பட்டுள்ள ”தேர்தல் விஷயங்கள்” இந்தப் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை பாதிப்பதை நோக்கமாகக் கொண்ட எந்த ஒரு விஷயமும் இதன் கீழ் வரும். பிரிவு 126-ன் வரைமுறைகளை  மீறுவது இரண்டு ஆண்டுகால சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிப்பதற்குரிய குற்றமாகும்.

   எனவே, பிரிவு 126-ல் குறிக்கப்பட்டுள்ள 48 மணி நேரத்தில் விவாதங்களில் பங்கேற்போர் உள்ளிட்ட கருத்துக்கள் / வேண்டுகோள்கள் குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளர் ஆகியோரின் தேர்தல் எதிர்காலத்தை மேம்படுத்தவதாகவோ அல்லது பாதிப்பதாகவோ அமைந்திருப்பதும் தேர்தல் முடிவுகளை பாதிக்கக் கூடியதாக இருப்பதும், இப்பிரிவில் அடங்கியுள்ளன. மேலும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுதல் மற்றும் விவாதங்கள், பகுப்பாய்வுகள், காட்சிப்பொருள்கள், ஒலிக்குறிப்புகள் ஆகியவற்றை வெளியிடுவதும் இப்பிரிவில் அடங்கும்.

    இந்திய பத்திரிகை சபை 30.07.2010 அன்று வெளியிட்ட அனைத்து நெறிமுறைகளை அனைத்து அச்சு ஊடகங்களும் கடைப்பிடிக்க  வேண்டுமென அந்த ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

   அதேபோல, அனைத்து மின்னணு ஊடகங்களும், செய்தி ஒளிபரப்பாளர் சங்கம் 03.03.2014 வெளியிட்டுள்ள  தேர்தல் ஒளிபரப்பாளர்களுக்கான நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென அந்த ஊடகங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

  அனைத்து சம்பந்தப்பட்ட ஊடகங்களும் தங்களுக்குரிய நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

 மேலும் விவரங்களுக்கு  www.pib.nic.in  என்ற வலைதளத்தை பார்க்கவும்.

******


(रिलीज़ आईडी: 1527520) आगंतुक पटल : 1224
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English