நிதி அமைச்சகம்

மின்னணு வே பில் அமைப்பு சார்ந்த தெளிவுரை

Posted On: 31 MAR 2018 6:30PM by PIB Chennai

மாநிலங்களுக்கிடையே சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான மின்னணு வே பில் அமைப்பு 2018 ஏப்ரல் முதல் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய மின்னணு வே பில் அமைப்பு குறித்த சில விளக்கத் தெளிவுரைகள் வருமாறு

  1. உதாரணம் - பொருள் அனுப்புவோர் ஒருவர் தனது சரக்குகளை X நகரிலிந்து z நகருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று எடுத்துக் கொள்வோம். இதற்கென அவர் சரக்குப் போக்குவரத்து முகவராக A –யை நியமிக்கிறார். A என்பவர் சரக்குகளை x  நகரத்திலிருந்து y நகரத்திற்குக் கொண்டு செல்கிறார். அனுப்புவோரின் ஆணைப்படி சரக்குகளை y நகரத்திலிருந்து z நகரத்திற்கு கொண்டு செல்வதற்காகப் போக்குவரத்து முகவர் A சரக்கை முகவர் B யிடம் ஒப்படைக்கிறார். அதனை அடுத்து சரக்குகள் தனது இலக்கான z நகரத்திற்கு முகவர் B மூலம் y நகரிலிருந்து கொண்டுச் சேர்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் மின்னணு வே பில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது.

தெளிவுரை:

இந்த நிகழ்வில் ஒரே ஒரு மின்னணு வே பில் மட்டுமே தேவைப்படும் என தெளிவாக்கப்படுகிறது. இதற்கென பொருள் அனுப்புவோர் படிவம் ஜி.எஸ்.டி. இ.டபிள்யு.பி. – 01 –ன் பகுதி ஏ யை நிரப்புவார். இதனை அடுத்து மின்னணு வே பில்லை அனுப்புவோர் போக்குவரத்து முகவர் ஏ –யிடம் வழங்குவார். இந்த படிவத்தின் பகுதி பி –யில் முகவர் ஏ வாகனத்தின் விபரங்களை நிரப்பிச் சரக்குகளை x நகரத்திலிருந்து y நகரத்திற்கு கொண்டு சேர்ப்பார்.

Y நகரத்தைச் சென்றடைந்தவுடன் முகவர் ஏ மின்னணு வே பில்லை போக்குவரத்து முகவர் பி –க்கு மாற்றிக் கொடுப்பார். இதனை அடுத்து முகவர் பி இந்த படிவத்தின் பகுதி 2 –ல் மேல் விபரங்களை நிரப்புவார். அதாவது முகவர் பி தனது வாகன விபரங்களை பகுதி பி –ல் சேர்த்து சரக்குகளை y நகரத்திலிருந்து z நகரத்திற்குக் கொண்டு செல்வார்.

  1. உதாரணம் – பொருள் அனுப்புவோர் தனது சரக்குகளைக் கொண்டு செல்வதற்காக வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்து முகவரிடம் ஒப்படைக்கிறார். ஆனால், போக்குவரத்து முகவர் திங்கட்கிழமை அன்றுதான் இந்த சரக்கைக் கொண்டுச் செல்லத் தொடங்குகிறார். இந்த நிகழ்வில் மின்னணு வே பில்லின் செல்லுபடி ஆகும் காலம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது.

தெளிவுரை:

மின்னணு வே பில்லின் தகுதிக் காலம் படிவம் ஜி.எஸ்.டி. இ.டபில்யு.பி. – 01 ன் பகுதி பி -யை முதல்முறையாக நிரப்பிய பின்புதான் தொடங்குகிறது.

இந்த உதாரணத்தில் பொருள் அனுப்புவோர் இந்த படிவத்தின் பகுதி ஏ –யை வெள்ளிக்கிழமை அன்று நிரப்பி தனது சரக்கைப் போக்குவரத்து முகவரிடம் அளிக்கிறார். முகவர் சரக்கை எடுத்துச் செல்லத் தயாரானவுடன் படிவத்தின் பகுதி பி –யை நிரப்பிக் கொள்ளலாம். அதாவது முகவர் திங்கட்கிழமை அன்று படிவத்தின் பகுதி பி –யை நிரப்பும் போது அப்போதிருந்துதான் தகுதிக்காலம் கணக்கிடப்படுகிறது.



(Release ID: 1527298) Visitor Counter : 135


Read this release in: English