நிதி அமைச்சகம்

மின்னணு வழிப்பாதை ரசீது முறை 2018 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுமூகத் தொடக்கம்

Posted On: 01 APR 2018 7:17PM by PIB Chennai

ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுப்படி அனைத்து மாநிலங்களுக்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு மின்னணு வழிப்பாதை ரசீது முறை 2018 ஏப்ரல் முதல் தேதி முதல் கட்டாயமாகியுள்ளது. ஜிஎஸ்டி வரிமுறையின்கீழ், நாடு தழுவிய மின்னணு வழிப்பாதை ரசீது முறையை தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் ஜிஎஸ்டி கட்டமைப்பு நடைமுறைப்படுத்தி வருகிறது.  இதற்காக https://ewaybillgst.gov.in. என்ற பெயரில் இயங்கி வருகிறது.

ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்குகளைக் கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்குப் பின்னர், நாடு முழுவதும் 2018 ஜனவரி 16 ஆம் தேதி சோதனை அடிப்படையில் மின்னணு வழிப்பாதை ரசீதுகள் வழங்கும் முறை தொடங்கப்பட்டது.

இதுவரை மின்னணு வழிப்பாதை ரசீது வலைதளத்தில் மொத்தம் 10,96,905 வரி செலுத்துவோர் பதிவு செய்துள்ளனர். மேலும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யாத 19,796 பேரும் இந்த வலைதளத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர். 2018 ஏப்ரல் 1-ம் தேதி மாலை 5 மணிவரை 1,71,503 மின்னணு வழிப்பாதை ரசீதுகளை வலைதளம் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

மின்னணு வழிப்பாதை ரசீதுகள் தொடர்பாக வரி செலுத்துவோர் மற்றும் சரக்குகள் கொண்டு செல்வோரின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஜிஎஸ்டியின் மத்திய உதவிப் பிரிவு பிரத்யேகமாக 100 முகவர்களுடன் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

மின்னணு வழிப்பாதை ரசீதுகளை ஆன்லைன் வலைதளம், ஆன்ட்ராய்டு செயலி, குறுந்தகவல்கள் ஆகியவற்றின் மூலம் மொத்தப் பதிவேற்றக் கருவி போன்றவற்றின் உதவியுடன் தயாரிக்க முடியும். பல்வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த மின்னணு வழிப்பாதை ரசீதுகளை வாகன இயக்குனர்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

சரக்குகளைக் கொண்டு செல்வோர் பல்முனை பயன்பாட்டாளர்களை உருவாக்கி, அவர்களுக்கு பணிகளை பகிர்ந்தளிக்கலாம்.  இந்த முறையில் ஏராளமான சரக்கு வாகன இயக்குனர்கள் தங்களது அலுவலங்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மின்னணு வழிப்பாதை ரசீதுகளை உருவாக்கியவர் 24 மணிநேரத்திற்குள் அதனை ரத்து செய்வதற்கான வழிமுறையும் இதில் உள்ளது. மின்னணு வழிப்பாதை செல்லுபடியாகும் காலத்திற்குள்ளோ அல்லது ரசீது உருவாக்கப்பட்ட 72 மணிநேரத்திற்குள்ளாகவோ இதில் எது முன்னரோ அந்தக் காலக்கட்டத்திற்குள் சரக்குகளைப் பெறுவோரும், ரசீதை நிராகரிக்கலாம்.



(Release ID: 1527191) Visitor Counter : 197


Read this release in: English