விண்வெளித்துறை

அணுசக்தி கடிகாரம்

प्रविष्टि तिथि: 28 MAR 2018 3:43PM by PIB Chennai

வழிகாட்டி  செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2, பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனம் மூலம் 2018 ஏப்ரலில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

.ஆர்.என்.எஸ்.எஸ்.-1ஏ செயற்கைக்கோளின் அணுசக்திக் கடிகாரம் செயலற்று போன போதிலும், அந்த செயற்கைக்கோளில் இருந்து, பேரழிவு எச்சரிக்கைகள், மீன்வளம் மிகுந்த பகுதிகளை கண்டறிந்து மீனவர்களுக்கு தெரிவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  குறிப்பிட்ட வழிகாட்டும் சேவைகளை வழங்குவதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2 செயற்கைக்கோள், வழிகாட்டும் தொகுப்பு செயற்கைக்கோள்களுடன் இணைக்கப்படவுள்ளது. 

வழிகாட்டி மற்றும் கலிலியோ செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்பட்ட அணுசக்தி கடிகாரங்கள், சுவிட்சர்லாந்தின் ஸ்பெக்ட்ரா டைம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.  இந்த கடிகாரங்களின் தோல்விக்கான காரணங்கள் ஆராயப்பட்டு, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-2 உட்பட வருங்காலத்தில் செலுத்தப்படவுள்ள அனைத்து செயற்கைக்கோள்களிலும் பயன்படுத்தப்படவுள்ள கடிகாரங்களில் உரிய பழுது சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துமூலம் பதிலளித்த மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை (தனிபொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு & ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.


(रिलीज़ आईडी: 1526947) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English