குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

எந்த மக்களுக்கு நாம் சேவை செய்கிறோமோ அவர்களுடனான நமது நெருக்கம் உறுதியானது அது தொடரும் : குடியரசுத் துணைத்தலைவர்

மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களிடையே உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 28 MAR 2018 3:12PM by PIB Chennai

குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு எம் வெங்கையா நாயுடு, எந்த மக்களுக்கு நாம் சேவை செய்கிறோமோ அவர்களுடனான நமது நெருக்கம் உறுதியானது அது தொடரும் என்றும் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் நம்மை வலுப்படுத்துவதாகவே உள்ளது என்றும் கூறினார். மாநிலங்களவையின் முக்கியத்துவம் என்பது தொடர்ச்சிக்கான கோட்பாடாகும் என்றும் மாற்றங்களுடன் தொடர்ச்சியும் கலந்திருக்கும் பலத்தில் நாம் பெருமிதம் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களிடையே அவர் இன்று (28.03.2018)  நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

 

கடந்த சில நாட்களாக மாநிலங்களவை செயல்படும் விதம் குறித்து தமது கவலையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத்தலைவர், செயல்பாடுகளுக்கு இடையூறு செய்வது, துரதிர்ஷ்டவசமாக அரசியல் நடைமுறை உத்தியின் பகுதியாகி விட்டது என்றும் இந்த அவை அவ்வப்போது, எதிர்ப்பு அரசியலின் அரங்கமாக ஆகிவிடுகிறது என்றும் கூறினார்.

 

மக்களின் நலனை மேம்படுத்துவதற்கு கிடைத்துள்ள வாய்ப்பாக இதனை கருதவேண்டும் என்று ஓய்வு பெறும் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்ட குடியரசுத் துணைத்தலைவர் இது பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெறுவது அல்ல என்றார். அரசியல்வாதிகள் ஒரு முறை பொதுவாழ்வுக்கு வந்து விட்டால், அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியின்போது, பேராசிரியர் குரியனின் மதிப்பு மிக்க வழிகாட்டுதலுக்காகவும், ஒத்துழைப்புக்காகவும், குடியரசுத் துணைத்தலைவர் பாராட்டு தெரிவித்தார். பணிநிமித்தமான அவரது அறிவுரை எனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற பெரிதும் எனக்கு உதவி செய்துள்ளது என்றும் அவர் கூறினார். மாநிலங்களவையில் ஒவ்வொரு உறுப்பினரின் பங்களிப்பும் விவாதங்களை செழுமைப்படுத்தியுள்ளது என்றும் உயிரோட்டமாக வைத்திருந்தது என்றும் குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

                                ----


(रिलीज़ आईडी: 1526839) आगंतुक पटल : 136
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English