கலாசாரத்துறை அமைச்சகம்

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மாதிரி நூலகங்கள் அமைக்க ரூ. 42.42 கோடி

Posted On: 27 MAR 2018 8:32PM by PIB Chennai

நூலகங்களை மேம்படுத்துவதற்காக மத்திய கலாசார அமைச்சகம் தேசிய நூலக இயக்கத்தை (National Mission on Libraries) 2014 ஆம் ஆண்டில் தொடங்கியது. அத்துடன், பொது நூலகங்களில் புத்தகங்கள், சாதனங்கள், மரச்சாமான்கள் வாங்குவதற்கும், நவீனமயமாக்கவும், புதிதாக நூலகங்களைக் கட்டவும், நடமாடும் நூலக சேவைகளை வழங்கவும், குழந்தைகளுக்குத் தனிப் பிரிவுகளை அமைக்கவும், மாற்றுத் திறனாளி வாசகர்களுக்காக வசதிகளை அமைத்துத் தரவும், கருத்தரங்குகள், பயிலரங்குகளை நடத்தவும் ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.

நூலகம் மாநிலப் பட்டியலில் இருப்பதால், தேசிய அளவில் கொள்கையை வகுத்து அமல்படுத்த இயலாது.

தேசிய நூலக இயக்கத்தின் கூறுகள் வருமாறு:

  1. இந்திய தேசிய மெய்நிகர் நூலகத்தை (National Virtual Library of India - NVLI) உருவாக்குதல். இந்தியாவைக் குறித்த டிஜிட்டல் ஆதாரங்களில் ஒருங்கிணைந்த புள்ளி விவரங்களைத் தொகுத்து, அனைவரும் பார்க்க வசதி செய்தல். பல்வேறு மொழிகளின் மூலம் தேடும் வசதி செய்தல். இந்திய தேசிய மெய்நிகர் நூலகத்தின் செயல்பாடு (NVLI) 2018, பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கப்பட்டு 2019ம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  1. தேசிய நூலக இயக்கத்தின் மாதிரி நூலகங்கள் அமைப்பது: 35 மாநில மத்திய நூலகங்களிலும் 35 மாவட்ட நூலகங்களிலும் மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் வரும் 6 நூலகங்களிலும் தேசிய நூலக இயக்கம் செயல்படுத்தப்படும். இதுவரை 22 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் மாதிரி நூலகங்களை அமைப்பதற்காக 41 பரிந்துரைகள் வரப்பெற்றுள்ளன. அதன்படி மொத்தம் ரூ. 42.42 கோடி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல்கள் கலாசாரம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவமாற்றத்துக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா மக்களவையில் எழுத்து மூலம் பதிலளித்தார்.

 

******


(Release ID: 1526837) Visitor Counter : 248
Read this release in: English