பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

'டிரைப்ஸ் இந்தியா' மின்னணு வணிக தகவு மற்றும் நடமாடும் வர்த்தக செயலியை திரு. ஜூவல் ஓரம் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2018 8:27PM by PIB Chennai

புதுதில்லி மகாதேவ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய பழங்குடியினர் மையத்தில், 'ஈ-டிரைப்ஸ்: டிரைப்ஸ் இந்தியா' எனப்படும் மின்னணு வர்த்தக முறையை மத்தியப் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு. ஜூவல் ஓரம் இன்று தொடங்கி வைத்தார்.  இந்தத் திட்டத்தில், டிரைஃபெட் நிறுவனத்தின் மின்னணு வணிகத் தகவு, www.tribesindia.com,   நடமாடும் வணிகம், டிரைப்ஸ் இந்தியா ஆண்ட்ராய்டு செயலி, உள்ளிட்டவை தொடங்கப்பட்டன.  இதுதவிர, ஓர் அரிய முயற்சியாக, ஸ்நாப் டீல், அமேசான், பே டி எம் மூலம், பழங்குடியினர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான  அரசு மின்னணு வணிக நடைமுறைகளுக்கான டிரைப்ஸ் இந்தியா விளம்பர பதாகைகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.  இவற்றின் மூலம் பழங்குடியினத்தைச் சேர்ந்த 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைவினைக் கலைஞர்கள் டிரைஃபெட் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1526824) வருகையாளர் எண்ணிக்கை : 120
இந்த வெளியீட்டை படிக்க: English