பாதுகாப்பு அமைச்சகம்

தீரச்செயல் மற்றும் சிறப்பு மிக்க சேவைக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார்

Posted On: 27 MAR 2018 7:42PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில்  இன்று (27.03.2018) நடைபெற்ற முக்கியமான விழாவில் தீரத்தையும் வெல்ல முடியாத துணிவையும் மிக உயர்ந்த அர்ப்பணிப்போடு கடமையாற்றிய ஆயுதப்படைகளின் வீரர்களுக்கு மூன்று கீர்த்தி சக்ரா விருதுகளையும், 17 சவ்ரிய சக்ரா விருதுகளையும் குடியரசுத் தலைவரும், இந்திய ராணுவத்தின் உச்சநிலை கமாண்டருமான திரு ராம் நாத் கோவிந்த் வழங்கினார். ஒரு கீர்த்தி சக்ரா விருதும், ஐந்து சவ்ரிய சக்ரா விருதுகளும் மரணத்திற்குப்பின் வழங்கப்பட்டன.

அசாதாரண நிலையில், சிறப்பு மிக்க சேவை செய்வதற்காக ஆயுதப்படைகளின் மூத்த அதிகாரிகளுக்கு 14 பரம் விஷிஸ்ட்  சேவைப் பதக்கங்களையும், ஓர் உத்தம் யூத் சேவா பதக்கத்தையும், 22 அதி விஷிஸ்ட்  சேவா பதக்கங்களையும் குடியரசுத் தலைவர் வழங்கினார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

----


(Release ID: 1526814) Visitor Counter : 147
Read this release in: English