ரெயில்வே அமைச்சகம்
அனைத்து ரயில்களிலும் எல்எச்பி தயாரிப்பு ரயில் பெட்டிகளே இருக்கும்
प्रविष्टि तिथि:
27 MAR 2018 6:55PM by PIB Chennai
நாட்டின் அனைத்து ரயில்களிலும் எல்எச்பி (LHB) எனப்படும் பெட்டிகளே இணைக்கப்படும். நடப்பு 2018-19ம் ஆண்டு முதல் இந்திய ரயில்வேயின் ரயில்பெட்டி உற்பத்திப் பிரிவுகளில் “லிங்க்கே ஹாஃப்மேன் புஷ்” (LHB) என்ற பெட்டிகளையே வடிவமைத்து, தயாரிக்கும்.
இதன்படி 2018-19ம் ஆண்டில் மொத்தம் 3,025 ரயில்பெட்டிகளை உற்பத்தி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று ஒரு கேள்விக்கான பதிலில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
****
(रिलीज़ आईडी: 1526808)
आगंतुक पटल : 115
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English