நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
ராஜஸ்தானில் முதலாவதாக மாபெரும் உணவுப் பூங்காவை மத்திய உணவுப் பதனத்துறை அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் பாதல் அஜ்மீரில் நாளை தொடங்கி வைப்பார்
Posted On:
28 MAR 2018 11:27AM by PIB Chennai
ராஜஸ்தானின் அஜ்மீரில் உள்ள ரூபன்கர் கிராமத்தில் முதலாவது மாபெரும் உணவுப் பூங்காவை மத்திய உணவுப் பதனத்துறை அமைச்சர் ஹர்சிம்ரட் கவுர் பாதல் நாளை (29.03.2018) தொடங்கி வைப்பார். இந்த உணவுப்பூங்கா ரூ.113.57 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அஜ்மீர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25,000 விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்தப் பூங்காவில் உள்ள 25-30 உணவுப்பதன பிரிவுகளில் கூடுதலாக சுமார் 250 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு இந்த மாபெரும் உணவுப்பூங்கா உந்துதலாக இருக்கும். இது ஆண்டுக்கு ரூ.450-500 கோடி அளவுக்கு வியாபாரம் நடக்க வழிவகுக்கும். இந்தப் பூங்காவின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிபிசி மற்றும் பிபிசி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள சுமார் 25,000 விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
----
(Release ID: 1526733)