பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
துயரத்தில் உள்ள பெண்களுக்கு முறையான மறுவாழ்வுக்கு இணையான முக்கியத்துவம் கொண்டது திறன் வளர்ச்சி : திருமதி மேனகா சஞ்சய் காந்தி
प्रविष्टि तिथि:
27 MAR 2018 4:06PM by PIB Chennai
கேங்டாக்கில் இன்று (27.03.2018) மனன் கேந்திராவில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா சஞ்சய் காந்தி சிக்கிம் அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் மற்றும் நலத்துறை அமைச்சர் திருமதி துல்ஷி தேவி ராயுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். சிக்கிமின் பல்வேறு துறைகளில் மேம்பாடு அடைந்த பாலினப் பெருக்கத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய-மாநில தொலைநோக்குப் பார்வை மற்றும் உத்திகளை பகிர்ந்து கொண்டு விவாதிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்தக் கூட்டம்.
பாலின ஏற்றத்தாழ்வை நீக்கிய வகையில் சிக்கிமின் சாதனைகளை மத்திய அமைச்சர் திருமதி காந்தி தமது நோக்க விளக்க உரையில் பாராட்டினார். சிக்கிம் அரசால் செயல்படுத்தப்படும் “திருமணமாகாத பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தைப்” பாராட்டிய மத்திய அமைச்சர் மத்திய அரசின் நிலையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கான யோசனையை தாம் முன்மொழிந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அனைத்து வடிவங்களிலான தொல்லைகளிலிருந்து பெண்களை விடுவிப்பது மட்டும் போதுமானதல்ல என்றும், பெண்களிடையே தொழில்துறை முயற்சிக்கான திறன்மேம்பாட்டை ஊக்குவிப்பதும் இணையான முக்கியத்துவம் கொண்டது என்றும் மத்திய அமைச்சர் வலியுறுத்திக் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
----
(रिलीज़ आईडी: 1526724)
आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English