தேர்தல் ஆணையம்
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கசிவு விவகாரம் குறித்து விசாரிக்க அதிகாரிகள் கொண்ட குழு: தேர்தல் ஆணையம் அமைப்பு
Posted On:
27 MAR 2018 5:59PM by PIB Chennai
தேர்தல் தேதி வெளியான விவகாரம் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் 2018 குறித்த அறிவிப்பின் போது தேர்தல் அட்டவணை வெளியிடப்படுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக திரு. அமித் மாளவியா தனது டுவிட்டர் பதிவில் 2018 மே 12 வாக்குப்பதிவு என்றும் 2018 மே 18 வாக்கு எண்ணிக்கை என்றும் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர் டைம்ஸ் நவ் செய்தி அலைவரிசையை இதற்காக அவர் மேற்கோள் காட்டியிருந்தார். டுவிட்டர் பதிவுகளில் வாக்குப்பதிவு நாள் 2018 மே 12 என்றும் வாக்கு எண்ணிக்கை நாள் 2018 மே 18 என கூறப்பட்டுள்ள போதிலும், கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுகள் எண்ணப்படும் நாள் 2018 மே 15 ஆகும் என இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.
இது குறித்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையமும் மூத்த அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது. இது குறித்து அந்தக் குழு விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கைகளை இந்தக் குழு பரிந்துரைக்கும். இந்தக் குழு ஏற்கனவே சம்பந்தப்பட்ட ஊடகம் மற்றும் தனிநபர்களிடம் தகவல்களைக் கோரியுள்ளது.
***********
(Release ID: 1526697)