நிதி அமைச்சகம்

பெரும் வாடிக்கையாளரின் வேலை மற்றும் செயல்முறைகளை புரிந்து கொள்ளும் தனித்தன்மையான முயற்சியில் தனது தொடக்க நாளான ஏப்ரல் 2ம் தேதி ஈடுபடுகிறது சிட்பி

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2018 1:32PM by PIB Chennai

இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) இந்த ஆண்டு தனது தொடக்க தினத்தை (2018 ஏப்ரல் 2) தனித்தன்மை வாய்ந்த முறையில் கொண்டாட உள்ளது. இந்த நாளில் அது தன்னுடன் மிகப்பெரிய அளவில் சம்பந்தப்பட்டுள்ள குறு மற்றும் சிறு நிறுவனங்களின் செயல்கள் மற்றும் செயல்முறைகளைப் புரிந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சியின் கீழ் சிட்பியின் சுமார் 175 அதிகாரிகள் நாடு முழுவதும் 23 நகரங்களிலும் 80 மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு தொகுப்புகளிலும் உள்ள தங்களது குறு மற்றும் சிறு நிறுவன வாடிக்கையாளர்களை சந்திக்க உள்ளனர். அதிகாரிகளின் இந்த விஜயம் வழக்கமான வாடிக்கையாளரை சந்திக்கும் பயனமாக இல்லாமல் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுடன் கூடுதல் நேரம் செலவிட்டு அவர்களது அன்றாட நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதுடன் முடிந்த இடங்களில் தொழில்முனைவோரின் வீடுகளுக்கும் விஜயம் செய்வார்கள்.

இது சிட்பி குறு மற்றும் சிறு நிறுவனங்களுடன் ஆரோக்கியமான உறவை ஏற்படுத்திக் கொள்ள உதவுவதுடன் தவறான கண்ணோட்டத்தை போக்கவும், பிரமிட்டின் அடிப்பகுதியாக கருதப்படும் குறு நிறுவனங்களில் உள்ள வாய்ப்புக்களையும் அவர்களின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தையும் தெரிந்து கொள்ள உதவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1526552) வருகையாளர் எண்ணிக்கை : 253
இந்த வெளியீட்டை படிக்க: English