பாதுகாப்பு அமைச்சகம்

டார்ஜிலிங் மற்றும் உதய்ப்பூரில் தன்னலமற்ற சேவையும் தியாகமும் செய்துவருவோரை சிறப்பித்தலுக்கான பேரணி

Posted On: 26 MAR 2018 5:44PM by PIB Chennai

தேச நிர்மாணத்திற்கு தன்னலமற்ற சேவையும் தியாகமும் செய்துவரும் ராணுவத்தினருக்கு அங்கீகாரமும் நன்றியும் தெரிவிக்கும் குறியீடாக சிறந்தோரை சிறப்பிப்பதற்கான பேரணி 25.03.2018 அன்று டார்ஜிலிங் மற்றும் உதய்ப்பூர் ராணுவத் திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2018-ம் ஆண்டு கடமையாற்றும்போது ஊனமுற்ற வீரர்களுக்கான ஆண்டாக இந்திய ராணுவத்தால் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்திய ராணுவத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் விதத்தில் ஊனமுற்ற வீரர்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படுவதோடு இத்தகைய வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் அவர்களைச் சார்ந்து வாழ்வோருக்கும்  வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

டார்ஜிலிங்கில் நடைபெற்ற பேரணியில் 8500க்கும் அதிகமான முன்னாள் ராணுவத்தினரும் அவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

உதய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில் 800க்கும் அதிகமான வீரர்களும் வீராங்கனைகளும் உயிர்நீத்த வீரர்களின் துணைவியரும் அவர்களைச் சார்ந்து வாழ்வோரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


(Release ID: 1526533) Visitor Counter : 108


Read this release in: English