ஊரக வளர்ச்சி அமைச்சகம்

சரஸ் அத்ஜீவிகா மேளா 2018

சுய உதவிக் குழுக்கள் வங்கிகளிடம் இருந்து ரூ.1,51,000கோடி நிதியை இதுவரை பெற்றுள்ளன

Posted On: 25 MAR 2018 4:03PM by PIB Chennai

மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புக்களைச் சந்தைப்படுத்துவது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் பெரும் சவால்களுள் ஒன்றாக உள்ளது. ஊரக மகளிர் கைவினைஞர்களுக்கு அதிகாரமளிக்கவும் அவர்கள் சிறந்த சந்தை மற்றும் சந்தைப்படுத்தும் முறைகளை அணுகி, அவர்களை வறுமைக்கோட்டுக்கு மேல் கொண்டு வரவும் நாடு முழுவதும் உள்ள சுய உதவிக் குழுக்கள் தங்கள் தயாரிப்புக்களை விற்பனை செய்வதற்காக சரஸ் என்ற பிராண்டு பெயரில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆதரவு அளித்து வருகிறது. தற்போது ஒரு நிதியாண்டில் ஒரு மாநிலத்தில் இரண்டு சரஸ் கண்காட்சிகளை ஏற்பாடு செய்ய அமைச்சகம் ஆதரவு அளித்து பெருநகரங்களில் (பெங்களூரு, மும்பை, சென்னை, தில்லி, கொல்கத்தா மற்றும் ஐதராபாத்) கண்காட்சிக்கு ரூ. 40 லட்சம் மற்றும் பெருநகரமில்லாத நகரங்களில் கண்காட்சிக்கு ரு. 35 லட்சம் நிதி உதவி அளிக்கிறது.

 

இதுதவிர, இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக தில்லியில் சரஸ் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுவதுடன், தில்லிஹாத்தில் சிசிர் மேளாவிலும் சரஸ் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை முன்னெடுத்துச் செல்லும் வகையில் 2017 மே மாதம் இந்திய வர்த்தக மேம்பாடு அமைப்பில் அத்ஜீவிகா மேளாவை அமைச்சகம் ஏற்பாடு செய்த்து. 2017  அத்ஜீவிகாமேளாவில் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஊரக ஏழை சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த மகளிர் தயாரித்த பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இந்தப் பெண்கள் தயாரித்த பண்ணை மற்றும் பண்ணை அல்லாத பொருட்களுக்கு மதிப்புக் கூட்டிய ஏராளமான தயாரிப்புக்களும் இடம் பெற்றிருந்தது. அத்ஜீவிகா மேளா 2017 வெற்றியால் ஊக்கம் கொண்ட டே-என்.ஆர்.எல்.எம். சரஸ் அத்ஜீவிகா மேளா 2018 கண்காட்சியை புதுதில்லி, எண். 7, பிரகதி மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளது. 2018 மார்ச் 23 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 350க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய உள்ளன. இந்த அரங்குகள் நாடு முழுவதும் உள்ள நமது மகளிரின் திறன், வாய்ப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை காட்சிப்படுத்தும்.



(Release ID: 1526420) Visitor Counter : 150


Read this release in: English , Urdu