மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

யுனெஸ்கோ நிர்வாக வாரியத்தின் இந்தியப் பிரதிநிதியாக பேராசிரியர் ஜே எஸ் ராஜ்புத்-ஐ மத்திய அரசு நியமித்துள்ளது

Posted On: 25 MAR 2018 4:25PM by PIB Chennai

யுனெஸ்கோவின் நிர்வாக வாரியத்துக்கு இந்தியப் பிரதிநிதியாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி சபை (NCERT)-யின் முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ஜே எஸ் ராஜ்புத்-ஐ நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. யுனெஸ்கோ உட்பட பல்வேறு துறைகளில் நீண்ட கால அனுபவம் பெற்ற புகழ்பெற்ற கல்வியாளர் பேராசிரியர் ஜே எஸ் ராஜ்புத் ஆவார்.

58 இடங்களைக் கொண்ட யுனெஸ்கோ நிர்வாக வாரியத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளவர் நான்கு ஆண்டு காலம் பதவி வகிக்கலாம். யுனெஸ்கோவின் அரசியல் சாசன அங்கங்களில் ஒன்றாக திகழும் நிர்வாக வாரியம், பொது மாநாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த வாரியம் அமைப்பு ரீதியான பணிகளையும் பட்ஜெட் மதிப்பீடுகளையும் ஆய்வு செய்யும். யுனஸ்கோவின் அனைத்து கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கான பொறுப்புடன்  முக்கிய அங்கமாக இந்த நிர்வாக வாரியம் செயல்படுகிறது.

2017 – 21 காலக்கட்டத்திற்கான நிர்வாக வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் 2017 நவம்பர் 8-ஆம் தேதி நடந்தது. 2017 அக்டோபர் 30-ஆம் தேதி முதல் நவம்பர் 14-ஆம் தேதி வரை நடைபெற்ற 39ஆவது பொதுமாநாட்டின் நான்காவது பிரிவில் இந்தியா 162 வாக்குகளை பெற்றது.

பேராசிரியர் ஜே எஸ் ராஜ்புத், பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களில் பெரும் பங்காற்றியவராவார்.

                                    ----



(Release ID: 1526405) Visitor Counter : 95


Read this release in: English