மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2018 இறுதிப்போட்டிகள் நாடு முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 28 மையங்களில் 2018 மார்ச் 30 மற்றும் 31ம் தேதிகளில் நடைபெறவுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2018 3:38PM by PIB Chennai
ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2018 (மென்பொருள் பதிப்பு) இறுதிப்போட்டிகள் நாடு முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 28 மையங்களில் 2018 மார்ச் 30 முதல் 31 வரை நடைபெறவுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவ்டேகர் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது இதனை அறிவித்தார். நாட்டின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு திறமை மிகுந்த இளம் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் அவர்களது ஊக்கம் ஆகியவற்றை திறம்பட பயன்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உலகின் மிகப்பெரும் தேசிய கட்டமைப்பு மின்னணு முன்முயற்சியாக இந்த ஸ்மார்ட் ஹாக்கத்தான் போட்டியை நடத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.
மென்பொருள் ஹாக்கத்தான் மற்றும் வன்பொருள் ஹாக்கத்தான் என ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2018 இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. இதில் மென்பொருள் ஹாக்கத்தான் பிரிவுக்கான இறுதிப்போட்டிகள் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 28 மையங்களில் 2018 மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் தொடர்ந்து 36 மணி நேரம் நடைபெறவுள்ளது. வன்பொருள் ஹாக்கத்தான் போட்டிகள் 2018 ஜுன் மாதம் நடத்தப்படவுள்ளது.
கணினித் துறையில் மென்பொருள் மற்றும் வன்பொருள் மேம்பாட்டிற்காகவும் அவற்றில் ஏற்படும் இடையூறுகளை களையவும் இத்தகைய ஹாக்கத்தான் நிகழ்வுகள் பெருமளவில் உதவி புரியும்.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1526263)
வருகையாளர் எண்ணிக்கை : 163