சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
வாகனங்களில் ஜிபிஎஸ் முறை
Posted On:
22 MAR 2018 6:17PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், 28.11.2016 அன்று அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. வாகனங்களில் அவை எந்த இடத்தில் பயணிக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளும் வசதி கொண்ட ஜிபிஎஸ் கருவியை பொருத்த இது வகைசெய்யும். இருசக்கர வாகனங்கள், மின்னணு ரிக்ஷா, மூன்று சக்கர வாகனங்கள், 1988-ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் உரிமம் தேவைப்படாத பிற போக்குவரத்து வாகனங்கள் தவிர்த்து, பொதுசேவை வாகனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அவசரகால பொத்தான்கள் அடங்கிய ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை 2018 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணையமைச்சர் திரு மான்சுக் லால் மாண்டவியா இதனைத் தெரிவித்தார்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
----
(Release ID: 1526257)