உள்துறை அமைச்சகம்

போதை மருந்து சட்ட அமலாக்கம் குறித்த முதலாவது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர்

இளைஞர்களிடையே போதை மருந்து பழக்கத்தை தடுப்பது முதன்மையான சவால் என கருத்து

Posted On: 23 MAR 2018 3:24PM by PIB Chennai

போதைப் பொருள்-பயங்கரவாதம் மற்றும் அதற்கான நிதியுதவி செய்வது உலகத்தின் குறிப்பாக இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சனை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் கூறியுள்ளார். போதை மருந்து சட்ட அமலாக்கம் குறித்த முதலாவது இரண்டு நாள் தேசிய மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய அவர், இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமையாவதை தடுப்பதே சட்ட அமலாக்க முகமைகள் மற்றும் சமுதாயத்தின் சவால் என்றார். இந்தியா போதை மருந்து கடத்துவோருக்கு எளிதான பாதையாக உள்ளது என்பதால் போதை மருந்து கடத்தல் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் முக்கிய போதை மருந்து சட்ட அமலாக்க முகமையாக உள்ள போதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் போதை மருந்து கடத்தல் தொடர்பான புலனாய்வு தகவல்களை உலகின் மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக தேசிய போதை மருந்து கட்டுப்பாட்டு அலுவலகம் பல்வேறு போதை மருந்து தொகுப்புகளை வெளிக்கொண்டு வந்து போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட சுமார் 400 வெளிநாட்டினரைக் கைது செய்துள்ளதாக திரு. ஆஹிர் கூறினார். உடல் நலத்திற்கான மருந்துகள், மருந்து தயாரிப்பு பொருட்கள் மற்றும் செயற்கை மருந்துகள் வடிவத்தில் புதிய சவால்கள் உருவாகின்றன என்றும் இதனை ஒடுக்க சட்ட அமலாக்க முகமைகள் புதிய முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். போதை மருந்து தொடர்பான வழக்குகளில் தண்டிக்கப்படுவோரின் விகிதம் குறைவாக இருப்பதால் சட்ட அமலாக்க முகமைகள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

 


(Release ID: 1526243) Visitor Counter : 151
Read this release in: English