பாதுகாப்பு அமைச்சகம்

முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 22 MAR 2018 6:11PM by PIB Chennai

ஒலியைவிட அதிக வேகத்தில் சென்று, எதிரிகளின் கப்பல்களை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, இன்று (22.03.18) காலை 8.42 மணியளவில், ராஜஸ்தான் மாநிலம், பொக்ரான் சோதனை தளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டு, சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணையும், அதை இலக்கை நோக்கி செலுத்த உதவும் கருவியும்   டிஆர்டிஓ மற்றும் பிரம்மோஸ் ஏவுதளத்தால் கூட்டாக உருவாக்கப்பட்டவை ஆகும்.

      டிஆர்டிஓ மற்றும் பிரம்மோஸ் விஞ்ஞானிகள், இந்திய ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த சோதனையை நடத்தினார்கள். டிஆர்டிஓ தலைவர் டாக்டர் எஸ். கிறிஸ்டோபர் இந்த சோதனையின்போது உடனிருந்தார்.

------


(रिलीज़ आईडी: 1526167) आगंतुक पटल : 193
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English