குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
உலக நீர் தினத்தை முன்னிட்டு ஊரக நீருக்கான நீர் பாதுகாப்பு சமூக அணுகுமுறை தொடர்பாக தேசிய ஆலோசனை கூட்டத்தை மத்திய குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகம் நடத்தியது
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2018 9:18AM by PIB Chennai
மத்திய குடிநீர் மற்றும் வடிகால் அமைச்சகம் உலக நீர் தினத்தை முன்னிட்டு ஊரக நீர் குறித்த ஸ்வஜல் சமூக அணுகுமுறை தொடர்பான தேசிய ஆலோசனையை புதுதில்லியில் 22.03.18 அன்று நடத்தியது. சமூகத்தின் உறுப்பினர்கள் தாங்களாகவே தங்கள் சமூகத்தில் நீர்வளம் குறித்த சுய உரிமை மற்றும் சுய மேலாண்மையை கையாள்வதே ஸ்வஜல் மாதிரி திட்டமாகும். ஸ்வஜல் மாதிரி திட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப்பிரதேசத்திலிருந்து பிரிக்கப்படாத உத்திராகண்ட் பகுதியில் பரிசோதிக்கப்பட்டது. தற்போது தேசிய அளவில் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது.
மத்திய குடிநீர் மற்றும் வடிகால் வாரிய இணையமைச்சர் திரு. எஸ்.எஸ். அலுவாலியா தனது தொடக்க உரையில், சமூக பங்களிப்பும்
சிக்கன நடவடிக்கையும் ஸ்வஜல் திட்டத்தின் முக்கியமான முன்முயற்சியாக உள்ளது என்று கூறினார். இந்தத் திட்டத்தை மீண்டும் தொடங்கியிருப்பதன் நோக்கம் சமூகத்தில் உள்ள வளங்களைப் பொறுத்து சமூகத்தினரால் எடுக்கப்படும் முடிவுகளைக் கொண்டு நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய முயற்சி மேற்கொள்வதே என்றும் அவர் தெரிவித்தார்.
உலக நீர் தினத்தை முன்னிட்டு அனைவரும் நீர் சிக்கனம் குறித்து உறுதியேற்க வேண்டுமென்றும் இதனால் தற்போது சர்வதேச அளவில் உள்நாட்டிலேயும் நிலவி வரும் குடிநீர் பிரச்னைகளை எதிர்கால சந்ததியினர் எதிர்கொள்ள வேண்டியிருக்காது என்றும் அவர் கூறினார்.
-----
(வெளியீட்டு அடையாள எண்: 1526154)
வருகையாளர் எண்ணிக்கை : 267