நிதி அமைச்சகம்

அடல் ஓய்வூதிய சந்தாதாரர்களுக்கு மின்னணு வசதிகள் மேம்பாடு

Posted On: 22 MAR 2018 6:04PM by PIB Chennai

அடல் ஓய்வூதிய திட்டத்தின் பயன்களை நாட்டு மக்களுக்கு விரிவாக்கும் வகையில் இத்திட்டத்தை செயல்படுத்தும் மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அடல் ஓய்வூதியத் திட்டத்தின் பயன்களை அதன் சந்தாதாரர்கள் வங்கி அல்லது அஞ்சல் நிலையங்களுக்கு செல்லாமலேயே பெறுவதற்காக மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பல்வேறு இணைய வசதிகளை வழங்கி வருகிறது. விரைவில் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டவுள்ளது.

அடல் ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வசதிகள்

  • சந்தாதாரர்களுக்கான குறைதீர் அமைப்பு.
  • ஓய்வூதிய தொகையை சுத்திகரித்தல் / குறைத்தல் தகவலை காணுதல்
  • அடல் ஓய்வூதியத் திட்டம் / தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் விவரங்களை அறிய சந்தாதாரர்களுக்கான மின்னணு செயலி.
  • சந்தாதாரர்களுக்கான ஆதார் பதிவு.
  • தேசிய ஓய்வூதிய திட்ட இணையதளத்தில் அடல் ஓய்வூதியத் திட்ட தகவல்கள்
  • கைப்பேசி செயலி.

இந்த வசதிகளை பயன்படுத்த சந்தாதாரர்கள் https://npslite-nsdl.com/CRAlite/ என்ற இணையதளத்தை பார்க்கலாம். அவரவர் தேவைகளுக்கு ஏற்ப இந்த சேவைகளை பயன்படுத்தலாம்.  



(Release ID: 1526107) Visitor Counter : 89


Read this release in: English