விவசாயத்துறை அமைச்சகம்

2018ஆம் ஆண்டை “தேசிய சிறுதானிய ஆண்டு”-ஆக அறிவிக்க மத்திய அரசு முடிவு

இடுகை இடப்பட்ட நாள்: 22 MAR 2018 6:32PM by PIB Chennai

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சி, உழவர்கள் கடின உழைப்பு ஆகியவை சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பதுடன், உணவுப் பழக்க வழக்கத்தில், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவுகிறது. மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய கூட்டத்தில் பேசிய மத்திய வேளாண் மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் திரு. ராதாமோகன் சிங் இதனைத் தெரிவித்தார். 

      குறைந்த வளம் கொண்ட நிலம், மலைப்பகுதிகள், பழங்குடியினர் பகுதி மற்றும் மழை குறைவாகப் பெய்யும் பகுதிகளில் சிறுதானியங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆந்திரா, சத்திஷ்கர், குஜராத், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, உத்திரபிரதசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த வகையான நிலப்பகுதிகள் உள்ளன. சிறுதானிய உற்பத்தி, ஏழைகளுக்கு வலுவான ஊட்டச்சத்து வழங்குவதில் நிச்சயம் பயன்படும்.

      2017 ஜூலை 18-ஆம் தேதி பிரதமர் கலந்து கொண்ட கூட்டத்தில்,  ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்த பொதுவிநியோக முறையின் மூலம் சிறுதானியங்கள் விநியோகத்தை தொடங்குவதென முடிவெடுக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார்.

      2018-ஆம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவசர நிலையில்கூட சிறுதானியங்களை சாகுபடி செய்வது, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்குப் பொருத்தமாக இருக்கும்.  சிறுதானிய உற்பத்தியை மேம்படுத்தும் வகையில், அவற்றுக்கான குறைந்தபட்ச ஆதாரக் கொள்முதல் விலையை நிர்ணயிப்பது, மதிய உணவுத் திட்டத்தில் அவற்றைச் சேர்ப்பது ஆகியவை பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

---------


(வெளியீட்டு அடையாள எண்: 1526105) வருகையாளர் எண்ணிக்கை : 981
இந்த வெளியீட்டை படிக்க: English