சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பெருநோய்களுக்கான மருத்துவ செலவுகளில் இருந்து 50 கோடி மக்களை தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம் பாதுகாக்கும்: ஜே.பி. நட்டா
இடுகை இடப்பட்ட நாள்:
22 MAR 2018 3:31PM by PIB Chennai
பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தால் நடத்தப்படும் தேசியசுகாதார பாதுகாப்பு இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் திரு. நரேந்திரமோடியின் தலைமை மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டதிரு. நட்டா, இந்த தேசியசுகாதார பாதுகாப்பு இயக்கம் என்பது முழுமையான சுகாதார உள்ளடக்கத்திற்கான ஒரு பெரும் நடவடிக்கை என்றார். இது 50 கோடிமக்களை (10 கோடி குடும்பங்களில் இருந்து) பெரும் நோய்களுக்கான சுகாதார செலவுகளில் இருந்து பாதுகாக்கும். மக்கள்தொகையில் 40% பேருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு இதுபயன் அளிப்பதாக இருக்கும் என்பதால் ஏழ்மையிலும் ஏழ்மையுடன் இருக்கும் மக்களுக்கு சேவை அளிக்கும் நமது முடிவுக்கு இது ஊக்கமளிக்கும் என அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு குடும்பத்திற்கும்ரூ. 5 லட்சம் அளிக்கப்படும் என்பதற்கு குடும்பத்தின் அளவு மற்றும் வயது ஆகியவற்றுக்கு எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லைஎன திரு. நட்டாமேலும்கூறினார். “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறவேண்டிய நோய் பாதிப்புக்குள்ளாகும் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு இது நிதி ஆதரவைஅளிக்கும்” எனதிரு. நட்டாகூறினார். சமூக பொருளாதார சாதிகணக்கெடுப்பு அடிப்படையில் ஏழ்மைநிலையிலும் பின்தங்கிய நிலையிலும் உள்ள குடும்பங்கள் ஆயுஷ்மான் பாரத்தேசிய சுகாதாரபாதுகாப்பு இயக்கத்தின் கீழ்பயனடையும். மத்தியஅரசின் திட்டமான ராஷ்ட்ரீயஸ் வஸ்தியபீமா திட்டம் மற்றும் மூத்தகுடிமக்கள் சுகாதார காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.
***
(வெளியீட்டு அடையாள எண்: 1525999)
வருகையாளர் எண்ணிக்கை : 190