தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

பணிக்கொடை வழங்குதல் திருத்த மசோதா 2018 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Posted On: 22 MAR 2018 3:36PM by PIB Chennai

 பணிக்கொடை வழங்குதல் திருத்த மசோதா 2018 நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேறியது. தனியார் துறை மற்றும்  பொதுத்துறை நிறுவனங்கள் / சிசிஎஸ் (ஓய்வூதியம்) விதிகளின்கீழ் வராத, அரசின்கீழ் உள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் ஊழியர்களிடையே இணக்கத்தை இந்த மசோதா உறுதி செய்கிறது. அரசுத் துறையில் உள்ள தங்களையொத்த ஊழியர்களுக்கு இணையாக, அதிகபட்ச பணிக்கொடை பெறுவதற்கு, இந்த ஊழியர்கள் உரிமை பெற்றவர்கள் ஆவர்.  இந்த மசோதா, மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.  மக்களவையில் 15.03.2018 அன்று நிறைவேற்றப்பட்டது.

     1972-ஆம் ஆண்டின் பணிக்கொடை வழங்கல் சட்டம் 10 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.  பணியாற்றுவோருக்கு ஓய்வுக்குப் பின் (வயது முதிர்ச்சி அல்லது உடல் ரீதியாக செயல்பட இயலாமை அல்லது உடலின் முக்கியமான உறுப்பு செயலிழத்தல் காரணமாக ஓய்வு பெறுதல்) சமூகப் பாதுகாப்பு வழங்கும் முக்கிய நோக்கத்துடன், இந்தச் சட்டம் இயற்றப்பட்டது. எனவே, பணிக்கொடை வழங்கும் சட்டம் 1972 என்பது, தொழில் நிறுவனங்களிலும், தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும் ஊதியம் பெறும் மக்களுக்கு மிக முக்கியமான சமூகப் பாதுகாப்பு சட்டமாகும்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

-------
 



(Release ID: 1525936) Visitor Counter : 179


Read this release in: English , Urdu