பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
மத்திய அரசுத் திட்டமான அனைவருக்கும் உயர் கல்வி தேசியத் திட்டத்தைத் தொடர அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
21 MAR 2018 8:37PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் மத்திய அரசின் அனைவருக்கும் உயர்கல்வி (ராஷ்ட்ரீய உச்சத சிக்ஷ அபியான்) தேசியத் திட்டத்தை 01.04.2017 முதல் 31.03.2020 வரை நீட்டிக்கத் தமது ஒப்புதலை அளித்துள்ளது.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் இலக்குகள்:
அ. நாட்டின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தை 2020க்குள் 30% ஆக உயர்த்த விழைகிறது இந்த திட்டம்.
ஆ. உயர்கல்வியில் மாநில அரசுகளின் செலவினத்தை அதிகரிக்கவும் இது விரும்புகிறது.
இ. 70 புதிய மாதிரி பட்டப்படிப்புக் கல்லூரிகள் மற்றும் 8 புதிய தொழிற்கல்விக் கல்லூரிகளையும் உருவாக்க வேண்டும் என இந்தத் திட்டம் தனது 2வது கட்டத்தில் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் 70 சுயாட்சிக் கல்லூரிகளில் தரம் மற்றும் நிபுணத்துவத்தை விரிவுபடுத்தவும், 50 பல்கலைக்கழகங்கள் மற்றும் 750 கல்லூரிகளுக்கு உள்கட்டமைப்பு ஆதரவு அளிக்கவும் இது விரும்புகிறது.
ஈ. கல்விச் சீர்திருத்தங்கள், நிர்வாகச் சீர்திருத்தங்கள், அங்கீகரிக்கும் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட சீர்திருத்தங்களை அளிப்பதன் மூலம் மாநிலங்களில் உயர் கல்விக்கான அணுகுதல், தரம் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
உ. சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு போதுமான உயர்கல்வி வாய்ப்புகளை அளித்து உயர் கல்விக்கான சமத்துவத்தை மேம்படுத்துவது, மகளிர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் கல்வி கற்போரின் எண்ணிக்கையை மேம்படுத்துவது.
ஊ. மாநில அரசுகளின் முயற்சிகளை விரிவுபடுத்தி ஆதரிப்பதன் மூலம் உயர் கல்வியில் உள்ள இடைவெளிகளை அடையாளம் கண்டு போக்குவது.
எ. தரமான உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் படைப்பதில் மாநிலங்கள் மற்றும் நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டி உணர்வை ஏற்படுத்துவது.
மேலும் விவரங்களுக்கு www.pib.com
*****
(Release ID: 1525887)